ஐந்திணை ஆராய்ச்சி
ஐந்திணை ஆராய்ச்சி ஐந்திணை -ஐந்து ஒழுக்கம். அவையாவன:- முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்பன. இப்பெயர்களே நிலங்களைந்தற்கும் பெயர்களாகவுமமைந்துள்ளன. இப்பெயர்சுள் நிலங்களுக்காங்கால் அவ்வப் பெயருடைய ஒழுக்கம் பற்றியே வந்ததென்பர் நச்சினார்க்கினியர். இளம்பூணர் அவ்வப் பெயருடைய பூவின் சிறப்புப் பற்றியும் மரத்தின் சிறப்புப் பற்றியும் வந்த தென்பர். இக்காரணத்தை நச்சினார்க்கினியர், " முல்லை முதலிய பூவாற் பெயர்பெற்றன இவ்வொழுக்கங்க ளெனின்,- அவ் வந் நிலங்ககளுக்கு முரியவாதலின் அவற்றாற் பெயர்கூறலு முரியவாமெனக் கடாயினார் விடையின்மை யுணர்க" எனக் கூறிமறுத்தனர். ஐந்திணை ஆயின்,- "ஒருபெயர்ப்பொதுச்சொலுள்பொருளொழியத் தெரிபுவேறுகிளத்த றலைமையும்பன்மையும் உயர்திணைமருங்கினு மஃறிணை மருங்கினும்" என்று தொல்காப்பியனார் கூறியிருத்தலின் தலைமைபற்றியேனும் பன்மைபற்றியேனும் பூவினாலும் பெயரிடுதலாமாதலின், இளம்பூரணர் கூறிய காரணத்தை நச்சினார்க்கினியர் மறுத்தல் பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது. சிறப்புந் தலைமையுள்டங்கும்.இளம்பூரணர் கூறியவாறு, முன்னைக் காலத்தே, பூவாலேனும் மரத்தாலேனும் பெயரிடுவதும் வழக...