ஐந்திணை ஆராய்ச்சி
ஐந்திணை ஆராய்ச்சி
ஐந்திணை -ஐந்து ஒழுக்கம். அவையாவன:- முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்பன. இப்பெயர்களே நிலங்களைந்தற்கும் பெயர்களாகவுமமைந்துள்ளன. இப்பெயர்சுள் நிலங்களுக்காங்கால் அவ்வப் பெயருடைய ஒழுக்கம் பற்றியே வந்ததென்பர் நச்சினார்க்கினியர். இளம்பூணர் அவ்வப் பெயருடைய பூவின் சிறப்புப் பற்றியும் மரத்தின் சிறப்புப் பற்றியும் வந்த தென்பர். இக்காரணத்தை நச்சினார்க்கினியர், " முல்லை முதலிய பூவாற் பெயர்பெற்றன இவ்வொழுக்கங்க ளெனின்,- அவ் வந் நிலங்ககளுக்கு முரியவாதலின் அவற்றாற் பெயர்கூறலு முரியவாமெனக் கடாயினார் விடையின்மை யுணர்க" எனக் கூறிமறுத்தனர்.
![]() |
| ஐந்திணை |
ஆயின்,-"ஒருபெயர்ப்பொதுச்சொலுள்பொருளொழியத் தெரிபுவேறுகிளத்த றலைமையும்பன்மையும் உயர்திணைமருங்கினு மஃறிணை மருங்கினும்"
என்று தொல்காப்பியனார் கூறியிருத்தலின் தலைமைபற்றியேனும் பன்மைபற்றியேனும் பூவினாலும் பெயரிடுதலாமாதலின், இளம்பூரணர் கூறிய காரணத்தை நச்சினார்க்கினியர் மறுத்தல் பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது. சிறப்புந் தலைமையுள்டங்கும்.இளம்பூரணர் கூறியவாறு, முன்னைக் காலத்தே, பூவாலேனும் மரத்தாலேனும் பெயரிடுவதும் வழக்காறாதலின் ஈண்டுங் குறிஞ்சி முதலிய நிலங்களுக்குப் பெயரிடுங் கால்அவ்வப் பெயருடைய பூப்பற்றியும் மரம்பற்றியும் இட்டாரென உரையாசிரியர் கூறியதே பொருத்தமென்பது எமது கருத்து. சிலவற்றிற்குப் பூப்பற்றியும் சிலவற்றிற்கு மரம்பற்றியும் வந்ததென்று கோடலினும் யாவற்றிற்கும் பொருந்த அவ்வப் பெயரையுடைய மரத்தின் தலைமைபற்றி யேனும் மிகுதிபற்றியேனும் வந்ததென்று கொண்டுவிடுதலே மிகப் பொருத்தமாம் என்பதும் எமது கருத்தாம்." நாவலந் தண் பொழில்" என்பதும் மரம்பற்றி வந்த பெயரேயாம். அங்ஙனம் கொள்ளவே; மரம்பற்றி நிலங்களும் நிலம்பற்றி அவ்வவ் வொழுக்கங்களும் பெயர்பெற்றன என்பது பெறப்படும்.
இனிப், புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் என்னும் உரிப்பொருள்களைந்தையும் முறையே குறிஞ்சி முதலிய ஐந்து நிலங்களுக்கும் உரியவாக்கியதற்குக் காரணம் யாதென ஆராயுங்கால், வேறுங் காரணங்களுமுளவேனும் அவ்வவ்வுரிப் பொருட்கும் அவ்வந் நிலத்திற்குமுள்ள குணவியைபு நோக்கி அவ்வவ்வுரிப்பொருளை அவ்வந்நிலத்திற்கு உரிமையாக்கினார் எனக் கோடலும் ஒரு காரணமாகுமென்பது எமது கருத்து. அவ்வியைபுதான் யாதோ எனின் - புணர்ச்சி தன்னைப்பொருந்தினார்க்கு இன்பந் தருதல் போலக் குறிஞ்சியாகிய மலைநிலமும் *அதனை "'முல்லை குறிஞ்சிஎன்பன.... பாலையென்று குறியிட்டார்' எனக்கூறுமாற்றனறிந்து கொள்க. (தொல்-பொருள்- ரு-ஞ் சூத்தி ரம் -இளம்பூரணருரை)
தன்கண் இயங்குவார்க்கும் வாழ்வார்க்கு மின் பந்தருதலான் அதனை அதற்கும், பிரிவு தன்னைப் பொருந்தினார்க்குத் துயர்க் கொடுமையைக் கொடுத்தல் போலப் பாலையாகிய சுரநிலமும் தன் கண் இயங்குவார்க்கும் வாழ்வார்க்கும் வப்புக் கொடுமையைக் கொடுத்தலினான் அதனை அதற்கும், இருத்தல் தன்னைப் பொருந்திய தலைவிக்குத் தலைவனைப் பிரிந்திருத்தலாற்றனிமையையும் தலைவனோடு கூடியனுபவிக்கும் ஐம்புல நுகர்ச்சியின்மையையுமளித்தல் போல, முல்லையாகிய காட்டுலகமும் உரைத்துறந்து தன்கண் இயங்குவார்க்கும் வாழுமுனிவராத்தியோர்க்கும் தனிமையையும் ஐம்புல நுகர்ச்சியின்மையையும் அளித்தலானே அதனை அதற்கும், ஊடல் தன்னைப் பொருந்திய தலைவிக்குமுன் சிறிது வெறுப்பையும் பின் பெரிய தோரின்பையுமளித்தல் போல, மருதமாகிய வயனிலமும், தன்கண் இயங்குவார்க்கும் வாழ்வார்க்கும் சேறு நீரு மிதித்தலால் முன் சிறிது வெறுப்பையளித்துப் பின் உடம்பிற்குப் பெரியதோரின் பையளித்தலானும் முயற்சி செய்வார்க்கும் முயற்சித்துன்பாற் சிறிது வெறுப்பையளித்துப் பின் பயனாற் பெரியதோரின்பையளித்தலினானும் அதனை அதற்கும், இரங்கல் தன்னைப் பொருந்திய தலைவிக்கு இரங்கலையே கொடுத்தல் போல நெய்தலாகிய கடலுலகள் மும் நாவாயேறித் தன்கண் இயங்குவார்க்கும் தொழில் செய்வார்க்கும் அச்சத்தானும் திரைகள் நீரைக் கொண்டு வந்து வீசுதலினானும் பிறவாற்றானும் இரங்கலைக் கொடுத்தலினானும் தன்கண் வாழுபிர்களும் பாதவரலைத்தலினாலே இரங்கலையுறுதலினாலும், கரை வாழ்வோர்க்கும், ஓதப்பெருக்கினானும், திரை வீசலினும் குளிர்காற்றானும் இரங்கலைக் கொடுத்தலினாலும் பரதவர் கடல் வேட்டை போக அவரை நினைந்து மனைவியர் இல்லிருந்திரங்கலானும் அதனை அதற்கும் உரிமையாக்கினாரென்பதே. இங்கே தலைமை பற்றி வாழ்வார் என உயர் திணைமேல் வைத்துக் கூறினும் அஃறிணையுங்கொண்டுகொள்க. மேற்கூறியபடி குறிஞ்சியாகிய மலைநிலம் தன்கண்வா ழுயிர்களுக்கும் இன்பம் அளிக்கும் என்பதை,
"கோழிலைவாழைக் கோண்மிகு பெருக்குலை
ஊழுறு தீங்கனி உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுனையொ டூழ்படு பாறை நெடுஞ்சனை விளைந்த தேற
லறியா துண்ட கடுவ னயலது
குறிவளர் சாந்த மேறல்செல் லாது
நறுவீ யடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்குங்
குறியா வின்பமெளிதி னின்மலைப்
பல்வேறு விலங்கு மெய்து நாட''
என்னும் (அகம், உ -ஞ்) செய்யுளானும்; பாலையாகியசுரம் வெப்பக்கொடுமை செய் யும் என்பதை,
"அடிதாங்க மளவின்றி யழலன்ன வெம்மையாற்
கடியவே நனங்குழா அப் காரென்றாரக்காட்டுள்” என்னும் (கலி -கக-ம் செய்யுளடிகளானும்,
"மரையாயா மால்கவர மாரிவ றப்ப
வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர்
சுரையம்பு மூழ்கச் சுருங்கிப்புரையோர்த
முண்ணீர் வறப்பப் புலம்வாடு நாவிர்குத்
தண்ணீர் பெறாத் தடுமாற் றருந்துயரம் கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றார்''
என்னும் (கலி- -ம்) செய்யுளானும் இன்னும் கலித்தொகையில்வரும் முதலாம் செய்யுண் முதலியவற்றானும் ; முல்லையாகிய காட்டு நிலம் தனிமையையும் ஐம்புல நுகர்ச்சியின்மையையும் அளிக்குமென்பது வழக்காற்றனும், வில்லிபுத்தூரர் பாரதத்து வரும்,
" நினைவற்ற சாப நிலைபெற்றபி
னெஞ்சின் வேறோ
ரினைவற்று நன்மையிது வேயினி
யென்று தேறி
மனைவைத்த காதன் மடவாருடன்
மன்றல் வேந்தன்
முனைவைத்த வாய்மை முனிக்கான
முயன்று சேர்ந்தான்" என்றும்,
“காண்டற் கரிய மணிப் பைம்பொற்
கலணொடாடை
வேண்டற் கரிய விடயங்களின்
வேட மாற்றித்
தீண்டல் கரிய திருமேனி யன்
றேவ ராலும்
பூண்டற் கரிய பெருமா தவம்
பூண்டு கொண்டான்"
என்றும் கூறிய செய்யுட்களானும், மருதமாகிய வயனிலம், சேறும் நீருமுடைய தென்பதை,
" துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை
அரிமல ராம்பன் மேய்ந்த நெறிமருப்
பீர்ந்தண் ணெருமைச் சுவல்படு முதுபோத்
தூங்கு சேற்றள்ளற்றுஞ்சி" [துத்
என்னும் (அகம் ௩க -ம்) செய்யுளடிகளானும்,
'சேற்றுநிலைமுனைஇய் செங்கட் காரான்" என்னும் (அகம் சகூ-ம்) செய்யுளடியானும், சேறு நீரு முடைமையில் இயங்கற் கரியதென்பது,
“பிரம்பொரு பெரும்பா ரடைந்துமிசை செற்றி
செதும்புபரந் தெங்குஞ் சேற்றிழுக் குடைத்தாய்
வாய்க்கா னிறைந்த போக்கரும் பணையொடு''
என்னும் பெருங்கதை உஞ்சை, முல்லை (உஎ-ம்உ கூ -ம்) அடிகளானும் அறியப்படுதலானே வாழ்வார்க்கும் இயங்குவார்க்கும் வெறுப்பளிக்கு மென்பதும்,
நெய்தலாகிய கடலுலகம் தன்கண் இயங்குவார்க்கு இரங்கலை யளிக்குமென்று, கந்தபுராணத்து,
"பிணைவிழைச் சூழ்தந்துய்ப்பப்
பெருமறை விதிவழாம
லணை விழைச் சடங்கிற் கொண்ட வரிவைய ரோடுதேவர்
இணை விழைச் சியற்கை கூடா
திரங்கினர்
புணை விழச் சலதி யாழ்ந்து
புலம்புகொண் மாக்களேபோல் ”
என்னும் செய்யுளானும், மணிமேகலை, ஆதிரை பிச்சையிட்டகாதையில் வரும்
" நாளியிரு முந்நீர் வளிகலன் வெளவ
வொடிமரம் பற்றி யூர்திரை யுதைப்ப
நக்கர் சாரணர் நாகர் வாழ்மலைப்
பக்கஞ் சார்ந்து"
என்னும் அடிகளானும் உய்த்துணரப்படலானும், நற்றிணை கஎரு -ம் செய்யுளில் வரும்,
"நெடுங்கட லலைத்த கொடுந்திமிற் பரதவர்"
என்னும் அடியானும் அகம் செய் யுளில்வரும்
"பெருங்கடற் பரப்பிற் சேயிறா நடுங்கக்
கொடுந்தொழின் முக்ந்த செங்கோலவ்வலை"
என்னும் அடிகளானும், கரையிலிருப்போரை ஓதம் அலைக்குமென்பது, நற்றிணை ககஎ-ம் செய்யுளில் வரும்
"பெருங்கடன் முழங்கக் கானன் மலர
இருங்கழி யோத மில்லிறந்து மலி"
என்னுமடிகளா ளறியப்படுதலினும், திரை நீரைக் கொண்டுவந்து எறிதல், நற்றிணை கூரு -ஞ்செய்யுளில் வரும்
'.....பொங்குபிதிர்
முழலிசைப்புணரியெழுகரு
முடைகடற்படப்பையெம்முறைவினூர்க்கே "
என்னும் அடிகளா னறியப்படுதலினாலும், அகம் - 2.OO -ம் செய்யுளில், குடில் வீடுகள் கடல் வெள்ளத்தாற் சூழப்படுதலினாலே இன்னாதஉறையுளையுடைய என்னுங் கருத்தமைய வரும்,
'நிலாவி னிலங்குமணன்மலி மறுகு
புலாலஞ் சேரிப் புல்வேய் குரம்பை
ஊரென வுணராச் சிறுமையோடு நீருடுத்து
இன்னா உறையுட் டாயினும் '
என்னும்அடிகளானே கடல்கரைக்கண்வாழ் வார்க்கும் இரங்கலளிக்குமென்பது அறியப்படுத்தலினாலும் அங்ஙனம் இரங்கலளிக்குமென்பது, நற்றிணை உகரு -ம் செய்யுளில் வரும்,
"நீனிறைப்பரப்பிற் பொங்குதிரையுதைப்ப
கரைசேர்பிருந்த கல்லென்பாக்கதது '
என்னுமடிகளானும் அறியப்படுதலினாலும்,
ஐந்து நிலங்களுக்கும் முறையே யைந்து குணமு முண்மையறிந்துகொள்க. உதார ணங் காட்டாதவற்றிற்கு உதாரணம் இலக்கியங்களுள் வந்துழிக் காண்க.
இங்ஙனம் குணவியை புண்மைபற்றியே ஐந்து நிலங்களுக்குமுரிய ஐந்து உரிப் பொருள்களும் வைக்கப்பட்ட தென்பது, இராமாயணத்திலே, கம்பரும்,
"பந்தருட்புரை பாசறைப் பொருள்வயிற் பருவந்
தந்தகேள்வரை யுயிருறத் தழுவினர் பிரிந்த
கந்தவோதியர் சிந்தையிற்கொதிப்பதக்கழலோர்
வந்தபோதவர் மனமெனக் குளிர்ந்த தவ்வனமே"
என்றுசீதை கூற்றாக வைத்து,
“பரிவிகந்த மனத்தொடு பற்றிலா
தொருவுகின்றளை யூழியருக்கனும்
எரியுமென்பதி யாண்னடயதீண்டுநின்
பிரிவினுஞ்சுடுமோ பெருங்கா ன்றாள் "
என்றும் பிரிவையும் பாலையையும் இயைவுபடுத்திக் கூறுதலானும் அறியப்படும். இன் னும் காலம்வாய்த்துழி இதனைக் குறித்து ஆராய்தும்.

Comments
Post a Comment