இலக்கியமரபு
இலக்கியமரபு இ லக்கிய மென்னுமிச்சொற் பழந்தமிழ்ச் சொல்லன்று; பிற்றைஞான்றை வடசொற் சிதைவு; இலக்கணமிலக்கியம் என்னும் இணைச்சொல்லுளொன்று. இலக்கணமென்பதூஉம் வடசொற்சிதைவு. இச்சொல்லுத் தொல்காப்பியத்துள்ளுங் காணப்படுகின்றது. ஆயினும் அதனுள் இலக்கியமென்பது காணப்படவில்லை. இலக்கணமென்பது தானும் இலக்கணவிலக்கியமென்னும் எண்ணுத்தொடரில்வரும் பொருண்மேல் வரவில்லை. அதுவும் இடைக்காலத்துப்புக்க இடைச்செருகலாகவேயிருக்க வேண்டும். அது அவ்விடங்கட்குப் பொருத்தமின்றி வேண்டாதிருப்பவும் அவ்விடங்களில் உள்ள பழந்தமிழ்ச்சொற் காணப்படாமையால் வடநூற்பயிற்சி யுடையவராய்த் தமிழ்நூலாய்ந்தார் தமக்குத் தோன்றியவாறு வலிந்து முடைந்துள்ள தென்பதனைத் தமிழ்நூற் பயிற்சிவல்லார் எளிதிற் கண்டுகொள்வர். இதுபோலும் இடைச் செருகல்பல தொல்காப்பியத்துள் ஆங்காங்குக் காணப்படும். திருவள்ளுவருடையமுப்பால் போலும்வரம்புடையமிகச்சிலவே இடைச் செருகற்குப் பெரிது மரியனவாம். அவையொழியப் பல்லாயிரம் யாண்டுகளாகவும் பன்னூறியாண்டுகளாகவும் வழங்கிவருமெந்நாலும் பதிப்புமுறைவருமுன் இடைச்செருகவில்லாதிருந்ததில்லை. வடமொழிக் கல்வியும்...