Posts

Showing posts from May, 2025

வளமான வாசிப்பு மானுடத்தின் மேம்பாடு ; சமகாலச் சூழலில் வாசிப்பு பழக்கத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் காரணிகள்

வளமான வாசிப்பு மானுடத்தின் மேம்பாடு ; சமகாலச் சூழலில் வாசிப்பு பழக்கத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் காரணிகள் ‘வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்’ என்பது ஆங்கில மெய்யியலாளரான பிரான்ஸிஸ்  பேக்கனின் (1561) புகழ் பெற்ற வாசகம். ‘கண்டதும் கற்கப் பண்டிதனாவான்’ என்பது தமிழர் தம் பழமொழி. இப் பழமொழியை இரண்டு விதத்தில் பொருள் கொண்டு விளக்கலாம். சிலர் கண்ணால் கண்டவுடன் ஆர்வம் காரணமாக நுணுக்கமாக எளிதில் விடயங்களைக் கற்றுக் கொள்வர். மகாபாரதக் கதையில் அர்ச்சுனன் சிறுவனாக இருந்த போது துரோணரின் வில்வித்தையைக் கண்டதும் கற்றுள்ளான். கிணற்றுள் விழுந்த பொருளை துரோணர் வில்லின் ஜாலம் கொண்டு எவ்வாறு வெளியே எடுத்தாரோ, அதைக் கண்டதும் அவ்வாறே தானும் முயற்சி செய்தான். கண்டதும் கற்றதால் பின்னாளில் நிகரற்ற இன்னொரு வில்லாளனானான் என்கிறது மகாபாரதம். இப்பழமொழிக்கு இன்னொரு பொருளும் கொள்வர். அதாவது பரந்துபட்ட வாசிப்பு ஒருவரைப் புலமையாளனாக்கும் என்பது ஆகும். எதுவாயினும் கல்விக்கும் அறிவு வளர்ச்சிக்கும் தூண்டுதலாய் அமையும் இப்பழமொழியை நினைவில் கொள்வது இவ்விடயத்தில் பொருத்தமானது.  கல்வி மற்றும் அறிவுவளர்ச்சியின் அட...