Posts

Showing posts from August, 2025

பனை நடுகை

  பனை நடுகை பனை மரமானது மேற்காபிரிக்கா , தெற்கு , தென்கிழக்காசிய நாடுகள் , அவுஸ்திரேலியாவுக் கண்மையிலுள்ள இந்தோனேசியாவின் கீழ்திசைத் தீவுகள் வரைக்கும் பரந்து காணப்படு கின்றது . பனையானது வரட்சி நோய்கள் ஆகிவற்றைத் தாங்கக்கூடியதும் தரிசு நிலங்களில் இலகுவில் வளரக்கூடியதுமான தாவரமாகும் . இவ்விடங்களில் இது தானாகவே எதுவித பசளையும் இன்றி வளர்ந்து ஒரு இயற்கைச் சூழலை ஏற்படுத்தக்கூடியது . வழமையாக துரித வளர்ச்சியை இது காட்டாவிடினும் வரட்சியான பிரதேசங்களின் பாதுகாப்பிற்கும் , அபிவிருத்திக்கும் சிறந்ததாவரமாவதோடு , மனிதனுக்குத் தேவையான பானம் , உணவு , நார் , கைப்பணிப் பொருட்கள் , வெட்டுமரம் , எரிபொருள் ஆகியவற்றை ஒரே சமயத்தில் தரக்கூடியதுமான மிக அருமையான தாரவங்களில் ஒன்றாகும் . பனையை தமது சொந்த வீட்டுத்தோட்டத்திலோ , அல்லது தோட்டவளவிலோ வளர்ப்பவர்களுக்கு உபயோகிக்கும் முகமாக இந்தச் சிறு கை நூல் தயாரிக்கப்பட்டுள்ளது . சரணாலயங்களை புரனமைத்தல் , பாதுகாத்தல் , காடுகள் மீளமைத்தல் , கரையோர நிலங்களை மண்ணரித்தல் , மணற்புயல் போன்றவற்றில் இரு...