பனை நடுகை

 

பனை நடுகை

பனை மரமானது மேற்காபிரிக்கா, தெற்கு, தென்கிழக்காசிய நாடுகள், அவுஸ்திரேலியாவுக் கண்மையிலுள்ள இந்தோனேசியாவின் கீழ்திசைத் தீவுகள் வரைக்கும் பரந்து காணப்படுகின்றது. பனையானது வரட்சி நோய்கள் ஆகிவற்றைத் தாங்கக்கூடியதும் தரிசு நிலங்களில் இலகுவில் வளரக்கூடியதுமான தாவரமாகும். இவ்விடங்களில் இது தானாகவே எதுவித பசளையும் இன்றி வளர்ந்து ஒரு இயற்கைச் சூழலை ஏற்படுத்தக்கூடியது. வழமையாக துரித வளர்ச்சியை இது காட்டாவிடினும் வரட்சியான பிரதேசங்களின் பாதுகாப்பிற்கும், அபிவிருத்திக்கும் சிறந்ததாவரமாவதோடு, மனிதனுக்குத் தேவையான பானம், உணவு, நார், கைப்பணிப் பொருட்கள், வெட்டுமரம், எரிபொருள் ஆகியவற்றை ஒரே சமயத்தில் தரக்கூடியதுமான மிக அருமையான தாரவங்களில் ஒன்றாகும்.

பனையை தமது சொந்த வீட்டுத்தோட்டத்திலோ, அல்லது தோட்டவளவிலோ வளர்ப்பவர்களுக்கு உபயோகிக்கும் முகமாக இந்தச் சிறு கை நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. சரணாலயங்களை புரனமைத்தல், பாதுகாத்தல், காடுகள் மீளமைத்தல், கரையோர நிலங்களை மண்ணரித்தல், மணற்புயல் போன்றவற்றில் இருந்து பாதுகாத்தல் போன்றவற்றுக்கு இக்கைநூல் பயன்படும்.

 

மரம் நடுகைக்கு வேண்டிய வித்துக்கள பனையை நாட்டுவதற்கு சிறந்த வித்துக்களைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். வித்துக்கள் கூடிய முளைத்திறன் அளவைக் கொண்டிருப்பதுடன், பின்னர் வீரியமான பனைகளை உண்டு பண்ணக்கூடியதாகவும் இருக்க வேண்டும். ஆகவே நன்கு வளர்ந்து அதிக எண்ணிக்கையில் பெரிய பழங்களை உண்டுபண்ணும் மரங்களில் இருந்து வித்துக்களை சேகரிப்பது சிறந்ததாகும். மேலும், பனம்வித்துக்கள் தமது வாழ்தகவைக் குறுகிய காலத்துக்குள் (ஒரிருமாதத்துக்குள்) இழந்து விடுகின்றபடியால் பனைவிதைகளை நாட்டும்போது அவற்றை உடனடியாக நடுதல் வேண்டும். நடுகைக்காக பெரிய வித்துக்களையும் பழுதடையாத வித்துக்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும். வித்துக்களை நாட்டமுன்னர் பழத்தில் இருந்த மேல்தோலையும், விதையைச் சுற்றியுள்ள பழச்சாற்றையுமகற்றிய பின்னர் நடுகைக்குப் பயன்படுத்தவும். பனங்கழியை சாப்பிடுவதற்கோ, அல்லது வேறு எத்தேவைகளுக்கோ பயன்படுத்தும் போது பனங்கழியை பிழிந்தெடுத் பின்னர் பெறப்பட்ட விதைகள் பனம் நடுகைக்கு சிறந்தவையாகும்.

பருவகாலத்தில் வித்துக்கள் நடுவதற்கோ அல்லது கிழங்கை உண்டாக்குவதற்கோ வித்துக்களைச் சேர்த்துவைக்கும்போது அவற்றை வெய்யில்படாத நிழலான இடத்தில் குவித்து வைப்பது நல்லதாகும்.

 

1. வித்துநடுகை)

வித்துக்களை நேரடியாக மண்ணில் நாட்டுவது தான் மிகவும் சுலபமானதும், இதுவரை காலமும் பயன்படுத்தப்படும் ஒரே ஒருமுறையுமாகும் விதை நாட்டும் இடத்தில் ஒரு மீற்றர் சதுர இடத்தை துப்புரவு செய்து 30 சென்ரி மீ றறர் சதுரமான நடுப்பகுதியில் 45 சென்ரி மீற்றர் ஆழத்துக்கு மண்ணை வெட்டி எடுக்கவும். பின்பு அதில் உள்ள கற்களை அகற்றிய பின்னர் அதே மண்ணைக்கொண்டு அல்லது வேறு நல்ல மண்ணைக்கொண்டு நிரப்பவும். மேற்படி தயாரிக்கப்பட்ட குழி ஒவ்வொன்றிலும் விதைகளை மேற்பரப்பிலிருந்து 8 தொடக்கம் 10 சென்ரி மீற்றர் ஆழத்தில் இட்டு விதைகள் மறையும் அளவுக்கு மட்டும் மண் போடவும்.

 

2. நாற்றுமேடைகளில் பனம் நாற்றுக்கள் வளர்க்கும் புதிய முறை (இம் முறையானது பெரிய அளவில் பனம் நடுகைக்கு ஏற்றது)

 

இந்த முறையில், நாற்றுக்கள் வித்தில் இருந்து அல்லாமல் கிழங்கில் இருந்து பெறப்படுகின்றன. புதிதாக பிடுங்கிய கிழங்குகளை எடுத்து அவற்றைச் சுற்றியுள்ள கபிலநிற மென்மையான மடலையும் அதனுடன் உள்ள வித்தையும் அகற்றி துப்பரவு செய்யவும். அடியிலுள்ள வேர் பகுதியை கவனமாக அறிந்து, அகற்றிய கிழங்கை நன்றாக கழுவி கிழங்கை கட்டின் அல்லது அதுபோன்ற வேறு பங்கஸ்கொல்லிகரைசலில் (2.3 கிராம் பங்கஸ்கொல்லியை 1 லீட்டர் நீரின் கரைத்தல்) தோய்த்த பின் மணல் பாங்கான மண்கொண்ட பொலித்தீன் பைகளுள் (15-30 செ.மீ) நாட்டவும்.

நாட்டும் பொழுது கிழங்கின் அடியில் இருந்த 12 செ.மீ. அளவு மணலுக்குள் புதைத்து ஏனைய பகுதி வெளியில் நிற்கும் படி விடவும். கிழங்குகளைக்கொண்ட பொலித்தீன்பைகளை ஒழுங்காக ஒரு இடத்தில் அடுக்கி அவற்றுக்கு நேர் வெய்யில் பிடிக்காவண்ணம் ஓலை, கயிற்றுச்சாக்கு அல்லது அது போன்றவேறு பொருளினால் நிழல் கொடுக்கவும், பொலித்தீன் பைகளில் உள்ள மண் உலரா வண்ணம் அடிக்கடி நீர் தெளிக்கவும். (ஒரு நாளைக்கு இருதடவைகள் காலையும் மாலையும்) அத்துடன் கிழங்குகள் ஆட்டுப்படா வண்ணம் பார்த்துக்கொள்ளவும். கிழங்குகளின் நுனியில் இருந்து மெல்லிய நீளமான பீலி போன்ற இளம் இலைகள் தோன்றும் பொழுது கிழங்குகள் புதிய வேர்பிடித்துவிட்டன என்பது தெளிவாகும்.

இந்நாற்றுக்களை 6 மாதந்தொடக்கம் ஒரு வருடத்தக்கும் நாற்றுமேடையில்வைத்திருக்கலாம். இவ்வாறு பெறப்பட்ட நாற்றுக்கள் தொடர்ந்து வரும் பருவகாலத்தில் தேவைப்படும் இடங்களில் நாட்டப்படலாம். தேவை ஏற்படின் இந்த நாற்றுக்களை பைகளில் இருந்து வெளியில் எடுத்து சிறிது வேர்களை அகற்றிய பின்னர் திரும்பவும் பொலித்தீன் பைகளில் இட்டு மேலும் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வருடங்களுக்கு பைகளில் வளர்க்கலாம். பெருமளவில் நடுகை செய்யும்பொழுது வெற்றிடங்கள் பல ஏற்படுவதுண்டு. அந்த இடங்களில் நடுவதற்கு இப்படிப் பொலித்தீன் பைகளில் வைத்திருக்கும் நாற்றுக்களைப் பயன்படுத்தலாம்.இவ்வாறான பனம் நாற்றுக்களை அலங்காரத்துக்காகவும் மற்றப் பாம் வகைகளை வளர்ப்பது போல வளர்க்கலாம்.

() வித்துக்களில் இருந்து பனங்கிழங்கு உற்பத்தி செய்யும் முறை.

நல்ல மண் உள்ள பிரதேசத்தை இதற்காக தேர்ந்தெடுக்கவும். கிட்டத்தட்ட 30 செ.மீ. ஆழத்திற்கு மண்ணை வெட்டி பனம்பாத்தி அமைக்கவும். இப்பாத்தியினுடைய அளவு எவ்வளவு வித்துக்கள் இடவேண்டும் என்பதைப் பொறுத்தாகும். ஒரு மீற்றர் சதுர மேற்பரப்புள்ளபாத்தியில் கிட்டத்தட்ட 500 வித்துக்களை பல அடுக்குகளில் போடலாம். பாத்தி தயாரிக்கும்பொழுது சுற்றியுள்ள மண்ணை வறுவி பாத்தியை 30- 40 செ.மீ. உயரத்துக்கு சிறு சரிவுடன் உயர்த்துதல் வேண்டும். சரிவாக இருக்கும்பொழுதுதான் நீர் இலகுவில்வடிந்தோடும். பகுதி ஒன்றில் கூறியவாறு வித்துக்களைத் தேர்ந்தடுத்து அவற்றை படம் 3 இல் குறிப்பிட்ட வகையில் மூன்று அல்லது 4 படைகளாக ஒன்றுக்குமேல் ஒன்றாக அடுக்கவும்.பின்னர் வித்துக்களை மூடுவதற்கு மட்டும் போதுமான மண்ணால்மூடி மேற்பாகத்தையும் நான்கு பக்கங்களையும் அமத்தி அணைத்து விடவும். முளைக்கும் காலத்தில்போதிய மழை இருக்குமாயின் விதைகள் தானாகவே முளைக்கும். வரட்சியான நிலமை ஏற்படுமாயின் அக்காலத்தில் பாத்திக்கு நீர் தெளிப்பது அவசியம். வெல் கூடிய நாட்களில் பாத்தி உலராவண்ணம் பனையோலை போன்ற பொருட்களால் மூடிவிடுவது பயனுள்ளதாகும். ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் கிழங்குகள் . பெறமுடியும். (3-4 மாதத்திற்குப் பின்னர்) கிழங்குகளைப் பிரித்தெடுக்கும்போது பாத்தியின் ஒர பக்கத்தில் கிட்டத்தட்ட 30 செ.மீ. ஆழத்துக்கு மண்ணை வெட்டி அகற்ற வேண்டும். பின்னர் படிப்படியாக கிழங்குகளைக்கிண்டி எடுக்கவும்.

 

() நாற்றுக்களைப் பாதுகாத்தல்.

ஆரம்பகாலத்தில் நாற்றுக்கள் மிருகங்களால், விசேடமாக கால் நடைகளினால் மேயப்படாமல் பாதுகாக்கப்படவேண்டும். முதல் இலைகல் வரும்பொழுது அந்த இடத்தில் பெறக்கூடிய முள் மரங்களினால் தற்காலிகமான பாதுகாப்பைக் கொடுக்கலாம். மாடுகள் இலைகளைக் கடிக்காது பார்ப்பதற்கு இலைகளின் மேல் சாணத்தைக் கரைத்தும் தெளிக்கலாம். பனை மநாற்றுக்கள் மிக ஆழத்தில் வேர்விட்டு இருபதினால் கால்நடைகள் கடித்துபாதிப்பை ஏற்படுத்ரதினாலும் அவை அடுத்துவருடம் திரும்பமுளைக்கக் கூடுமானாலும் இவற்றில் வளர்ச்சி மட்டுப்படத்தப்படும்.

நாற்றுநடுகை. விதைநடுகைக்கு பொருத்தமான இடைவெளி

1.    வீட்டுத்தோட்டம்

ஒவ்வொருாற்றுகளுக்குமிடையில் 3 மீற்றர் இடைவெளியும், நிரல்களு- கக் கடையில் அதே இடைவெளியும் தேவை .

 

 

எல்லைப்பயிர்

காணிகளின் எல்லைகள் அல்லது வேலிகளாகவோ, பெரும் பிரதேசங்களின் பாதுகாப்பிற்காகவோ நெருக்கமாக நடும்பொழுது 2 மீற்றர் இடைத்துாரம் பொருத்தமானது.

 

3. பெருந்தோட்ட நடுகை

1. பனை மட்டும் தனியாக நாட்டல் 3 x 3 மீற்றர்இடை போதுமானது.

2.பனையைக் கலப்பு அல்லதுஊடுபயிராக நாட்டல்

மரமுந்திரிகை, இலுப்பை, வேம்பு, விளாத்தி, புளி,இப்பில் இப்பில் போன்றவற்றை பனையுடன் ஊடுபயிராகப் பயிரிடலாம். அப்பொழுது பனையை 10 மீற்றர் இடைவெளயிலும் பிறபயிர்களை இவற்றுக்கிடையிலும் நாட்டலாம். தரிசு நிலத்திலும் பார்க்க ஒரளவு நல்ல தரையில் நீர்ப்பாய்ச்சல் உள்ளதெனின் அன்ன உன்னா,நெல்லி, கொய்யா,மா போன்ற தாவரங்களை ஊடுபயிராகவும் வளர்க்கலாம்.

Comments

Popular posts from this blog

மரபும்‌ வழக்கும்

இலக்கிய நுகர்வு

பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு