Posts

சைவ சித்தாந்த வளர்ச்சியில் சிவஞான போதத்தின் வகிபங்கு

சைவ சித்தாந்த வளர்ச்சியில் சிவஞான போதத்தின் வகிபங்கு அறிமுகம் சைவ சித்தாந்தம் என்பது தமிழ்மொழி பேசும் சைவ சமய மரபில் உருவான உயர்ந்த தத்துவப் பாங்காகும். இதன் அடிப்படை நோக்கம் — மனித ஆன்மா பாசங்களிலிருந்து (அணவம், கன்மம், மாயை) விடுபட்டு, சிவனுடன் ஒன்றிணையும் வழியை விளக்குவதாகும். இவ்வழியில், பல சைவ சித்தாந்த நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் மிகச் சிறப்பாகவும் ஆழமான தத்துவ விளக்கத்துடனும் விளங்குவது **சிவஞான போதம்** எனும் நூலாகும். சைவ சித்தாந்தத்தின் தத்துவ அடித்தளத்தையும், ஆன்மீக வளர்ச்சியையும், வழிபாட்டு முறைகளையும் தெளிவாக வகுத்துக் காட்டிய முக்கிய நூலாக **சிவஞான போதம்** திகழ்கிறது. இக்கட்டுரையில், சைவ சித்தாந்த வளர்ச்சியில் சிவஞான போதத்தின் பங்கு, முக்கியக் கருத்துகள், ஆசிரியர் மரபு, மற்றும் அதன் பிந்தைய தாக்கம் குறித்து ஆராயப்படுகிறது. சைவ சித்தாந்தத்தின் தோற்றமும் வளர்ச்சியும் சைவ சித்தாந்தம் தமிழ்நாட்டின் பண்டைத் தத்துவ மரபிலிருந்து உருவானது. இதன் ஆரம்பம் அகம சாத்திரங்களிலும் சிவாகமங்களிலும் காணப்படுகிறது. பின்னர், **திருமூலர்**, **மெய்கண்டர்**, **அருள்நந்தி சிவாச்சாரியர்**, **உம...

ஐந்திணை ஆராய்ச்சி

Image
ஐந்திணை ஆராய்ச்சி ஐந்திணை -ஐந்து ஒழுக்கம். அவையாவன:- முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்பன. இப்பெயர்களே நிலங்களைந்தற்கும் பெயர்களாகவுமமைந்துள்ளன. இப்பெயர்சுள் நிலங்களுக்காங்கால் அவ்வப் பெயருடைய ஒழுக்கம் பற்றியே வந்ததென்பர் நச்சினார்க்கினியர். இளம்பூணர் அவ்வப் பெயருடைய பூவின் சிறப்புப் பற்றியும் மரத்தின் சிறப்புப் பற்றியும் வந்த தென்பர். இக்காரணத்தை நச்சினார்க்கினியர், " முல்லை முதலிய பூவாற் பெயர்பெற்றன இவ்வொழுக்கங்க ளெனின்,- அவ் வந் நிலங்ககளுக்கு முரியவாதலின் அவற்றாற் பெயர்கூறலு முரியவாமெனக் கடாயினார் விடையின்மை யுணர்க" எனக் கூறிமறுத்தனர்.  ஐந்திணை  ஆயின்,- "ஒருபெயர்ப்பொதுச்சொலுள்பொருளொழியத் தெரிபுவேறுகிளத்த றலைமையும்பன்மையும் உயர்திணைமருங்கினு மஃறிணை மருங்கினும்" என்று தொல்காப்பியனார் கூறியிருத்தலின் தலைமைபற்றியேனும் பன்மைபற்றியேனும் பூவினாலும் பெயரிடுதலாமாதலின், இளம்பூரணர் கூறிய காரணத்தை நச்சினார்க்கினியர் மறுத்தல் பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது. சிறப்புந் தலைமையுள்டங்கும்.இளம்பூரணர் கூறியவாறு, முன்னைக் காலத்தே, பூவாலேனும் மரத்தாலேனும் பெயரிடுவதும் வழக...

சேர். பிரான்சிஸ் டிறேக்

Image
 சேர். பிரான்சிஸ் டிறேக் சேர். பிரான்சிஸ் டிரேக் சேர் பிரான்சிஸ் டிறேக் என்பவர் இங்கிலாந்து தேசத்திற் கீர்த்தி வாய்ந்து விளங்கிய தளபதியாயிருந்தார். ஆறாவது எட்வேட் அரசர் காலத்துப் பிற்காலத்திலே இவர் ஓர் சிறு பையனாக விளங்கினார். இவருடைய தந்தையார் கடற்படை வீரர்களுக்கு, "ஜெபம்" வாசிக்கும் உத்தியோகத்தமர்ந்திருந்தார். தகப்பனாரோடு கப்பலிலேயே சதா தங்கியிருந்தமையால் இவருக்குச் சிறு வயதிலேயே யுத்தப்பிரியம் ஏற்பட்டுவிட்டது. மேரி ராணி சிம்மாசனமேறியதும் இவருடைய தகப்பனார் தனது பதவியிழந்தார். ஆகவே பிரான்சிஸ் டிரேக் என்பவர் பிரான்சோடும், ஒல்லாந்தோடும் வியாபாரஞ்செய்த ஒரு கப்பலிலே வேலையில் அமர்ந்தார். அந்த வேலை மிகவும் கடுமையாயிருந்தது. ஆனாலும் கப்பல் வாழ்க்கை டிரேக் என்பவருக்கு நல்ல தேகபலத்தைக் கொடுத்தது. எலிசபெத்ராணி சிம்மாசனமேறியதும், டிரேக்கினுடைய தகப்பன் கென்ற் மாகாணத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்துக்குக் குருவாக நியமிக்கப்பட்டனர்.  டிரேக்கினுடைய எசமானும் இறந்துபோனார். கப்பலும் டிரேக்கினுடைய கைவசம் வந்தது. இந்தக்கப்பல் மூலம் சிறிதுகாலம் டிரேக் வியாபாரம் நடாத்தினார். ஆனா ல்ஸ்பானிப தேசத்து மன்ன...

தமிழ்மரபும்‌ பேராசிரியரும்‌

Image
தமிழ்மரபும்‌ பேராசிரியரும்‌ ஒரு மொழியினது தனித்தன்மை அதன்‌ மரபிலேயே தங்கியிருக்‌கிறது. மரபு சிதையுந்தோறும்‌ மொழியுஞ்‌ சிதையுமென்பது வரலாறு கண்ட உண்மையாகும்‌. உலக மொழிகளிலே மிகச்சிறந்த இடத்தைப்‌ பெறுந்தமிழ்‌ மொழிக்கு அதன்‌ மரபே உயிராகும்‌, மரபைப்‌ புறக்கணித்து எழுதப்படும்‌ எழுத்து, வழங்கப்படுஞ்‌ சொல்‌, அச்சொல்‌ கருவியாக உணரப்படும்‌ பொருள்‌ ஆகியவையெல்லாம்‌ நரம்பறுந்த யாழுக்குச்‌ சமமாகும்‌, தமிழ்‌ மரபைப்‌ பேணுதற்காகத்‌ தமிழ்‌ மொழியிலே நிகழ்ந்த ஆக்கவேலைகள்‌ பலவாம்‌. இவ்வாக்கங்‌கருதியுழைத்த அறிஞரும்‌ பலராவர்‌, தொல்காப்பியர்‌ முதல்‌ கணேசையர்‌ வரை இவர்களை நாம்‌ கண்டு மகிழ்கிறோம்‌. இலக்கண நூல்கள்‌, நிகண்டுகள்‌, இலக்கண நூலுரைகள்‌, அகராதிகள்‌, விளக்கவுரைகள்‌ என்ற பற்பல துறைகளில்‌ இத்தமிழ்ப்பேரறிஞர்களின்‌ கவனஞ்‌ சென்றது. தமிழ்‌ மரபைப்‌ பேணிவரும்‌ இந்நூல்களைப்‌ படித்து மகிழும்போது தமிழ்‌ மரபைச்‌ சிதைக்கும்‌ நூல்களையும்‌ ஆங்காங்குக் ‌காண்கின்றோம்‌. மரபைக்‌ கெடுக்குங்‌ குற்றங்களை எடுத்துக்காட்டி அக்குற்றங்களை நீக்க முற்பட்ட நற்றமிழாசிரியரும்‌ பலராவர்‌. இந்‌நல்லறிஞர்‌ வரிசையிலே தொல்காப்பியப்‌ பொருளதி...

மரபும்‌ வழக்கும்

Image
மரபும்‌ வழக்கும் ‌ மரபு முதியது; வழக்குப்‌ புதியது; வழக்கின்‌ முதிர்ச்சியே மரபு வழக்கு முதிர்ந்து செம்மை அழகு உண்மை பெற்றவிடத்து மரபாகும்‌. “மரபு என்பது தொன்று தொட்டுவந்த வழக்கு'' என்றார்‌ அரசஞ்சண்முகனார்‌. நிலை நிறுத்திய வழக்கே மரபாகும்‌. அது பழமையுடையது; தொன்னெறிமுறைமையுடையது. வழக்கிலுள்ளது வழக்கு. வழங்குமாற்றான்‌ வழக்கெனப்படும்‌. கற்றார்‌ கல்லாதார்‌ ஆகிய மக்கள்‌ எல்லாராலும்‌ பொருளுணர்ந்து பேசுமாறு எளிய சொற்களால்‌ அமைந்த சிறந்த மொழிநடையே வழக்கு. மக்களிடையே பலமுறையும்‌ பழகிய சொற்களாற்‌ சிறப்பாக விரிந்து இயலும்‌ இவ்வழக்கியன்‌ மொழியினைச்‌ சேரிமொழி என்பர்‌ தொல்காப்‌பியனார்‌. மரபு, இயல்‌, விதி, இலக்கணம்‌, நியதி, முறைமை, தன்மை, வழக்கு இவையெல்லாம்‌ ஒரு பொருட்பன்மொழி எனினும்‌ இலக்கணநூலாசிரியர்கள்‌ வெவ்வேறு பொருளாற்றல்‌ புலப்படப்‌ பயன்படுத்தியுள்ளார்கள்‌. நன்னூலார்‌ பதம்‌, சொல்‌, மொழி, கிளவி என்ற ஒரு பொருட்சொற்களைப்‌ பயன்படுத்திப்‌ பல இலக்கணங்களை வகுத்தனர்‌. மரபு என்ற சொல்லினைத்‌ தொல்காப்பியர்‌ தமது நாலெங்கணும் ‌உபயோகித்தனர்‌. அதற்கு ஒருவாற்றால்‌ வரையறையுங்‌ கூறினர்‌. “மாற்றருஞ்‌ சிறப...