சேர். பிரான்சிஸ் டிறேக்

 சேர். பிரான்சிஸ் டிறேக்

சேர். பிரான்சிஸ் டிரேக்
சேர். பிரான்சிஸ் டிரேக்

சேர் பிரான்சிஸ் டிறேக் என்பவர் இங்கிலாந்து தேசத்திற் கீர்த்தி வாய்ந்து விளங்கிய தளபதியாயிருந்தார். ஆறாவது எட்வேட் அரசர் காலத்துப் பிற்காலத்திலே இவர் ஓர் சிறு பையனாக விளங்கினார். இவருடைய தந்தையார் கடற்படை வீரர்களுக்கு, "ஜெபம்" வாசிக்கும் உத்தியோகத்தமர்ந்திருந்தார். தகப்பனாரோடு கப்பலிலேயே சதா தங்கியிருந்தமையால் இவருக்குச் சிறு வயதிலேயே யுத்தப்பிரியம் ஏற்பட்டுவிட்டது. மேரி ராணி சிம்மாசனமேறியதும் இவருடைய தகப்பனார் தனது பதவியிழந்தார். ஆகவே பிரான்சிஸ் டிரேக் என்பவர் பிரான்சோடும், ஒல்லாந்தோடும் வியாபாரஞ்செய்த ஒரு கப்பலிலே வேலையில் அமர்ந்தார்.

அந்த வேலை மிகவும் கடுமையாயிருந்தது. ஆனாலும் கப்பல் வாழ்க்கை டிரேக் என்பவருக்கு நல்ல தேகபலத்தைக் கொடுத்தது. எலிசபெத்ராணி சிம்மாசனமேறியதும், டிரேக்கினுடைய தகப்பன் கென்ற் மாகாணத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்துக்குக் குருவாக நியமிக்கப்பட்டனர். 

டிரேக்கினுடைய எசமானும் இறந்துபோனார். கப்பலும் டிரேக்கினுடைய கைவசம் வந்தது. இந்தக்கப்பல் மூலம் சிறிதுகாலம் டிரேக் வியாபாரம் நடாத்தினார். ஆனா ல்ஸ்பானிப தேசத்து மன்னன் தனது நாட்டுத்துறைமுகங்களிலே ஆங்கிலேயருடைய கப்பல்கள் வராதபடி தடுக்க, டிரேக், ஜோன்ஹோக்கின்ஸ் என்பவரின்கீழ் வேலைக்கமர்ந்து, ஒரு அணிகரமான கடல்சஞ்சாரியாகவும், அடிமை வர்த்தகனாகவும் ஆனார்.

ஒருமுறை ஹோக்கின்ஸ் என்பவருடைய கப்பல்கள்,  ஒரு புயற்காற்றினால், மெச்சிக்கோக் குடாக் கடலிலுள்ள ஸ்பானியருக்குச் சொந்தமான ஒரு துறைமுகத்திற்குள்ளே தள்ளப்பட்டன. ஸ்பானியர் அக்கப்பல்களைத்தாக்கி, அரைவாசிக்கு மேற்பட்ட கப்பல்களை நாசமாக்கினர். அன்று தொடக்கம் ஹோக்கின்சும் டிரேக்கும் ஸ்பானியர்மீது கொஞ்சமாவது இரக்கம் வைப்பதில்லையென்று மனவுறுதி கொண்டனர்.

டிரேக்கினுடைய சீவியம் முழுவதும் துணிகரச்செயல்கள் நிரம்பியவை. அவை முழுவதையும் தொகுத்துக்கூறின் அவை ஓர் பெரும் புத்தகமாகும். அச்செயல்களுள் இரண்டொன்றை நோக்குவோம்.

1572-ம் ஆண்டு டிரேக் என்பவர் பிளிமத் துறைமுகத்தினின்றும், இரண்டு கப்பல்களுடனும், நன்றாகப் பயிற்றப்பட்ட எழுபத்துமூன்று வீரரோடும் புறப்பட்டார். இங்ஙனம் புறப்பட்டதன் நோக்கம் யாதெனின், அமேரிக்க கடற்கரையிலே ஸ்பானியருக்குச் சொந்தமானதோர் துறைமுகத்தைப் பிடிப்பதேயாம் . அங்கு ஸ்பானியர் தமது நாட்டுக்குக் கொண்டு போகும்பொருட்டு பொன் சேர்த்து வைத்திருந்தார். இந்தப் பொன்னையபகரிப்பதும் டிரேக்கினுடைய நோக்கமாகவிருந்தது. 

ஆறுவாரம் பிரயாணஞ்செய்த பின்பு டிரேக் அமரிக்க கடற்கரையை அடைந்தார். அங்கேயவர் றான்ஸ் என்னும் இன்னொருவரைச் சந்தித்தார். எல்லாம் ஆயத்தமானதும் கப்பல்களெல்லாம் அத்துறைமுகத்தை நோக்கிச் சென்றன. சென்று சிறிது தூரத்திலே தங்கி நின்றன. சந்திர வெளிச்சத்தினுதவியைக் கொண்டு கப்பல்கள் கரையைநோக்கிக் கிட்டிச்சென் றன. கப்பல்கள் கரையைக் கிட்டியதும், கப்பலிலிருந்த வீரர்கள் யாவரும் கரையிலிறங்கிப் பீரங்கிகள் சேர்த்து வைக்கப்பட்ட இடத்துக்குப் போய்ப் பீரங்கிகள் எல்லாவற்றையும் கடலுக்குள்ளே உருட்டி விட்டார்கள். பின்பு டிரேக் தன்னுடைய ஆட்களை இரு பிரிவாகப்பிரித் து, தீவர்த்தி வெளிச்சத்தோடும், யுத்தப்பறை முழக்கத்தோடும் வீதிவழி அணிவகுத்துச்சென்றார். நகரத்தின் மத்தியிலே ஸ்பானிய பட்டாளம் ஒன்று இவர்களையெதிர்த்தது. துப்பாக்கிக் குண்டுகளையும் அம்புகளையும் சொரிந்து கொண்டு ஆங்கிலேயர் ஸ்பானியரைத் தாக்கி, வாளினாலும் ஈட்டியினாலும் அவர்களைத் தோற்று ஓடச்செய்தனர். பின்பு டிரேக்கும் அவரது சகாக்களும் தேசாதிபதியிலுடைய அரண்மனையை அடைந்தனர். அங்கே 10 அடி அகலமும், 12 அடி உயரமும் 70அடி நீளமுமுடைய வெள்ளிச்சலாகைக் குவியலைக் கண்டார்கள். ஆனால் வேறெவ்விடத்தோ பொன்னிருக்கும் என்பது டிரேக்குக்குத் தெரியும். ஆகவே இந்த வெள்ளிக்குவியலை எடுக்காது பொன்னைநாடிச் செல்வாராயினர்.

திடீரென ஒரு பெரும் புயலும் மழையும் வந்து வில் நாண்களையும் துப்பாக்கிகளையும் நனைத்து உபயோக மற்றதாக்கிவிட்டன. ஸ்பானியர் தங்கள் திரவியத்தைக் காப்பாற்றும் பொருட்டு வந்தனர். தனது சைனியத்தை நடாத்திக் கொண்டு சென்ற டிரேக் காலில் ஓர் காயமடைந்ததனால் கீழே விழுந்தார். உடனே அவரது யுத்த வீரர்கள் அவரை வள்ளத்தில் ஏற்றிச் சென்றனர். இம்முறை டிரேக் அனுகூலமடையவில்லையாயினும், பிந்திய முறைகளில் அனுகூலமடைந்தார். ஸ்பானியர் இவருக்கு மிகவும் பயந்தார்கள். இப்படியே பலவிடங்களுக்கும் சென்று டிரேக் பொன் சேகரித்துக்கொண்டு இங்கிலாந்துக்குத் திருபினார். 

உலகத்தைச்சுற்றி யாத்திரை செய்த ஆங்கிலேயருள் டிரேக் என்பவரே முதலானவர். இவ்வுலகச்சுற்றுப் பிரயாணத்தில் இவர் அடைந்த வெற்றிகள்,தோல்விகள், விபத்துக்கள் முதலியவற்றை விரித்தெழுதப்படின்அது ஒரு பெருநூலாகும். 

ஸ்பானிய தேசத்து மன்னன் ஆங்கிலேயரைத் தாக்குதற்கெனத் தயாரித்த “ஆமடா” என்னும் கப்பற்படையை இந்த டிரேக் என்பவரே நாசமாக்கினர். இது நிகழ்ந்தது 1880 ஆம் ஆண்டு என்பர். பின்பு இவருக்கு எலிசபெத் அரசியால் ''நைற்” பட்டம் வழங்கப்பட்டது. பிற்காலம் இவர் பிளிமத் நகரிற் தேசாதிபதியாயிருந்தார். அங்ஙனம் இருந்த காலத்தில் நாட்டுக்கு நன்மை பயக்கும் காரியங்கள் பல செய்துவந்தனர்.

பின்னுமொருமுறை, தனது பழைய நண்பனாகிய ஹோக்கின்ஸ் என்பவரோடு, அமரிக்காவுக்கு, ஒரு திரவியக் கப்பலைப் பிடிப்பதற்கு டிரேக் போக நேர்ந்தது. இவர்கள் அங்கு போவதற்கிடையில், அக்கப்பல் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டது. எனவேயிவர்கள் துறைமுகங்களைப் பிடிக்க முயன்றனர். ஆனால் இம் முறை துறைமுகங்கள் நன்கு அரண் செய்யப்பட்டிருந்தமையால் ஆங்கிலேயருடைய முயற்சி பலிக்கவில்லை. பின்பு ஹோக்கின்ஸ் என்பவர் சுர நோய் கண்டிறந்தனர். டிரேக் என்வருக்கும் சுரநோய் கண்டது. 1589-ம் ஆண்டு மாசி மாதம் 8 -ந் திகதி டிரேக் மண்ணுலக வாழ்வை நீத்தனர். 

டிரேக் என்பவர் இங்கிலாந்துக்கு அருஞ்சேவைகள் பலவும் புரிந்தார். புறெட்டெஸ்டான்டு மதத்தினர்க்கு விரோதமாக உபயோகிக்கவிருந்த பணத்தை ஸ்பானியரிடமிருந்து தான் பிடுங்கியது கடவுளுக்கு செய்த தொண்டென அவர் கருதினார். டிரேக் புறொட்டெஸ்டான்டு மதத்தைச் சார்ந்தவர். ஆனால் கோயில்களை இடிக்க இவர் ஒருபோதும் சம்மதங்கொடுத்திலர். தான் வெற்றிகொண்டவர்களை ஒருபோதும் கொன்றிலர் . ஒரு ஸ்திரியையாவது நிராயுதபாணியையாவது கொலை செய்யக்கூடாதெனத் தனது ஆட்களுக்குக் கடும் பிரமாணம் விதித்திருந்தனர்.

ஸ்பானியர் இவரைப் பகைத்திருந்த போதிலும் இவரது துணிவையும் கெட்டித்தனத்தையும் வியந்தார்கள். அக்காலத்திலே ஐரோப்பாவிலே சுத்த சூனியமாயிருந்த சீவதயை இவரிடத்தே காணப்பட்டமையினால் இவரை ஸ்பானியர் பெரிதும் மதித்தார்கள். தாய்நாட்டன்பு, சீவகாருண்ணியம், அறப்போர்புரியுமியல்பு, இராச விசுவாசம் முதலிய குணங்கள் இவர் மட்டில் பெரிதும் அமைந்து விளங்கின . அஞ்சாமையிவரிடத்து ஒரு அணிகலனாக விளங்கிற்று. யுத்த தந்திரத்திற் சிறந்த ஞானமும் அனுபவமுமுடையராய் விளங்கினர்.  

Comments

Popular posts from this blog

மரபும்‌ வழக்கும்

இலக்கிய நுகர்வு

பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு