இலக்கியமுஞ்‌ சமூக வாழ்வும்

இலக்கியமுஞ்‌ சமூக வாழ்வும்

“முடிபுனை கடிகை'' வரப்போகின்றது. முடிசூட்டுக்‌குரிய மங்கல நிகழ்ச்சிகள்‌ நடைபெற்‌றுக் கொண்டிருக்கின்றன. கலைமகளை மணந்த காகுத்தன்‌, திருமகளை மணந்தவில்லின்  செல்வன், நிலமகளையும் மணக்கப்போகின்றான்‌. மூவுலகுக்கும்‌ பொதுவான முடிசூட்டு விழா. நீ, நான்‌ என்று சொல்லிக்கொண்டு முடிமன்னரும்‌, மண்டலாதிபதிகளும்‌, பட்டவர்த்தனரும்‌ முதலிய பிரபலவான்கள்‌ விரைந்து புறப்பட்டுச் ‌செல்கின்றார்கள்‌. சனசமுத்திரம்போன்று பொதுமக்கள் ‌மகிழ்ச்சியொலியுடன்‌ திரண்டு வருகின்றார்கள்‌. இத்தனையும் ‌எதற்கு? தசரதன்‌ வாயாலேயே ௯றிவிட்ட முடிபுனை கடிகைக்கு. “நடையில்‌ நின்றுயர்‌ நாயகன்‌” முடி சூடுவதை நானிலம்‌ முழுதுமே நயந்துநிற்கின்றது.

“மாதர்கள்‌ கற்பின்‌ மிக்கார்‌ கோசலை மனத்தை யொத்தார்

வேதியர்‌ வசிட்ட னொத்தார்‌ வேறுள மகளி ரெல்லாம்

சீதையை யொத்தார்‌ அன்னாள்‌ திருவினை யொத்தான் ‌அவ்வூர்ச்

சாதுகை மாந்த ரெல்லாம்‌ தசரதன்‌ தன்னை யொத்தார்‌.”

சமபுத்தி படைத்த இராமபிரானின்‌ முடிசூட்டுவிழா எல்லார்க்‌ குஞ்‌ சமமான மனமகிழ்ச்சியை யளிப்பது இயல்புதானே. இதில்‌ வியப்பென்ன?

Tamil Culture and literature


அரதன விளக்கங்களால்‌ அலங்கரிக்கப்பெற்று அவிர்ந்து விளங்குகின்றது அயோத்திமா நகரம்‌. அங்கே இரவும்‌ பகலாகி விட்டது. விஞ்ஞான கலாநிதி சர்‌. சந்திரசேகர வேங்கடராமன்‌ என்பார்‌ இரத்தினசோதியை எவ்வாறு பொதுசன உபயோகத்திற்கு உரியதாகச்‌ செய்யலாம் என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்ற இரத்தினப்‌ பரீட்சையின்‌ முடிபினை 2000 ஆண்டுகளுக்கு முன்னேயே கண்டுபிடித்திருந்தது. இந்திய நன்னாடு. இரத்தின தீபங்களால்‌ எழில்பெற்று இலங்குகின்ற இல்லங்களையும்‌, வீதிகளையுந்‌ தன்னகத்தே கொண்ட இனிய அயோத்திமாநகரம்‌ அமரர்க்கும்‌ அருத்திபுரிகின்‌றது. இராவணன்‌ காலத்து இலங்காபுரியும்‌ இத்தகையதே, நவரத்தினங்களுள்‌ முத்துப்போன்று உலகநாடுகளின்‌ மத்தியிலே இசையொளிபரப்பி நிற்கின்ற நம்மிரு நாடுகளும்‌ விஞ்ஞான உலகின்‌ மத்தியிலே நாட்டிய புகழினும்பார்க்க, உலக சமுதாய வாழ்வின்‌ மத்தியிலே ஈட்டித்தந்துள்ள இணையில்லாப்‌ புகழானது அவற்றின்‌ அழகாகிய சிகரத்தின்‌ மணிமுடி போன்று திகழ்வதைக்‌ கம்பராமாயண காவியம்‌ கவின்பெறக்‌ காட்டி நிற்கின்றது.

இயற்கை யழகுஞ்‌ செயற்கை யழகும்‌ உலக சமுதாய அழகுடனே இரண்டறக்‌ கலந்து உறவாடுகின்ற அயோத்திமாநகரம்‌ இனியதோர்‌ இன்ப நிலமாகக்‌ காட்சியளிக்கின்றது. இந்த இன்ப நிலத்தின்‌ மத்தியிலே எதிர்பாராததொரு சம்பவம்‌, முன்பே முடிந்த சம்பவம்‌, மறைந்துகிடந்த சம்பவம்‌, சாதாரண மக்களின்‌ அறிவுக்குப்‌ புலப்படாததொரு சம்பவம் ‌பயன்படும்‌ செவ்வியை யடைந்து திடீரெனத்‌ தோன்றுகின்‌றது. விளையாட்டால்‌ விளைந்த வினையாகிய இச்சம்பவம்‌, விதியென்‌னும்‌ பெயர்கொண்டு விளையாடத்‌ தொடங்கிவிட்டது.

“பண்டைநாள்‌ இராகவன்‌ பாணி வில்லுமிழ்

உண்டை”

யென்கின்ற அந்த வினைவிளைத்த விளையாட்டுக்‌ கருவியை நமக்குக்‌ கற்பித்துக்‌ காட்டுகின்றார்‌ கம்பர்‌ பெருமான்‌. இந்தக் ‌கழிமண்ணுருண்டையைக்‌ கூனி யென்பாள்‌ தன்னுள்ளத்தே உள்ளுகின்ற வினையால்‌ விதியானது தனது விளையாட்டை ஆரம்பிக்கின்‌ றது.

கூனி இலேசானவள்‌ அல்லள்‌; மிகப்‌ பழையவள்‌; இராசகுடும்பத்துப்‌ பெண்களிடையே நல்லசெல்வாக்குப்‌ பெற்றவள்‌; எங்கும்‌ அடிபட்டவள்‌; கோள்‌ சொல்வதில்‌ அடிப்பட்டவள்‌; நரித்‌ தந்‌திரி; சகுனியையுந்‌ தன்‌ கைப்‌ பொம்மையாக்கத்‌ தக்க சமயோசித சந்தர்ப்பவாதி, ஏக காலத்திலே மூன்று மனைவியர்களை வைத்துக்கொண்டிருந்த தசரச்‌ சக்கரவர்த்தியின் ‌குடும்பத்திலே உள்படு கருமத்‌ தலைவியாக இருந்தமையால் ‌கூனியின்‌ கோளோடு கூடிய மனக்கோள், மூவுலகுக்கும் ‌இடுக்கண்‌ மூட்டக்கூடிய ஆற்றல் வாய்ந்தது. அவளது விளையாட்டு வினையாகி, வினை விதியாகி, விதி தான்விளையாடுவதை இங்கே காண்போம்‌.

இராப்பகலற்ற நகரிலே, இரவு வேளையிலே கூனி கிளம்புகிறாள். எங்கும்‌ மலர்ந்தன முகங்கள்‌. கூனியின்‌ முகம்‌ மாத்‌திரம்‌ ஒரு கூம்பு. இன்று வாடிக்‌ கூம்பிவிட்டது. கூனியைக்‌ கவனிக்க ஒருவருக்கும்‌ நேரமில்லை. சாதாரண குறைபாடுகளைப்‌ பெரிதாக்கிக்கொண்டு சமயம்‌ வரும்போது பழிவாங்க விரைந்து செல்லுகின்ற கயமை உலகிற்குத்‌ தன்னை ஓர்‌ உதாரணமாகக்‌ காட்டுகின்றாள்‌ போன்று கூனி செல்கின்றாள்‌. அவள்‌ நடந்து செல்லுகின்றாள்‌. என்று சொல்வதற்கில்லை; குடுகுடுத்‌து ஓடுகின்றாள்‌; கைகேயிஅன்னையின்‌ மாளிகையுட் ‌புகுகின்றாள்‌; கால்களை வருடுகின்றாள்‌; காதிலே ஏதோ குசுகுசுத்துப்‌ பேசுகின்றாள்‌. ஒரு கபடநாடக சூத்திரதாரியாகிவிட்டாள்‌ கூனி.

விதி விளையாடுகிறது. அது முதற்‌ காரணம்‌; கூனி துணைக்‌ காரணம்‌; கைகேயி நிமித்த காரணம்‌. வினை விளைவு ஒரு நியமம்‌; ஆகம  சாத்திரங்களாலே நிறுவப்பட்டதோர் ‌உண்மை; அனுபவ சாதனம்‌. சாத்திரக்‌ கருத்தின்‌ முடிபாக அமைந்துள்ள இன்வினை விளைவினைச் சமூக வாழ்விலே மக்கள் ‌நிறைவேற்றி வைக்கின்ற இந்த நியதியை இலக்கியங்கள்‌ சிருட்‌டித்துக்‌ காட்டுகின்றன. இதனால்‌, சமூக வாழ்வின்‌ நியதி நிகழ்ச்சிகள்‌ நிறைந்த ஓவியச்‌ சாலைகள்‌ போன்று காட்சியளிக்கின்றன இலக்கியங்கள்‌. இராமாயணமும்‌, இவ்வண்ணம்‌ நிகழ்வண்ணம்‌ இனிது காட்டும்‌ மெய்வண்ணக்‌ கவின்வண்ணக்‌ கருத்து வண்ணத்தின்‌ செவ்வண்ணந் திகழுஞ்‌ சீரியதோர்‌ இலக்‌கியமா யமைகின்றது. இலக்கியங்களிலே கதாபாத்திரங்களிள் ‌அமைதி நியமம்‌ உயிர்போன்றுள்ளது.

“முடி புனை கடிகை” யை நிறைவேற்றத்‌ துணை செய்கின்றாள் ‌கூனி. கடிகை யென்பதற்கு நேரம்‌ என்னும்‌ பொருளோடு, நீக்குதல், தடைப்படுதல்‌ என்னும்‌ பொருளும்‌ உண்டல்லவா? தசரத மன்னன்‌ வாயில்‌ இரட்டுற மொழிதலாக வந்து அப்போது குறிப்பால்‌ அமங்கலம்‌ பயந்து நின்ற கடிகை யென்னுஞ்‌சொல்லின்‌ அமங்கலப்‌ பொருளை வெளிப்படையாக உலகம் ‌அறிதற்குத்‌ துணையாகின்றாள்‌. கூனி. கடிகை யென்னுஞ் ‌சொல்லைத்‌ தசரதன்‌ சொல்லவில்லை விதி கூட்டிற்று.

சீதையின்‌ கிளிப்பிள்ளைக்குங்‌ கைகேயி என்பது பெயர்‌. அவ்வளவு அன்பு. இராமன்மீது கைகேயிக்குள்ள பேரன்பு, பேராத நல்லன்பு, தாய்மையன்பு. இராமனுக்கும்‌ இவ்வாறே சீதைக்கும்‌ இதுவே.

“என்னொ ரின்னுயிர்‌ மென்கிளிக்

கியார்‌ பெய ரீகேன்

மன்ன வென்றலும்‌ மாசறு

கேகயன்‌ மாதென்

அன்னை தன்பெய ராகென

அன்பினொ டந்நாள்”

சொன்னவன்‌ இராமன்‌; இட்டவள்‌ சீதை. உண்மை அன்பிற்கு இது உதாரணம்‌. தமது உண்ணீர்க்‌ கலசத்‌துக்குச் ‌“சவுக்கத்தலி அண்ணா” என்று பெயரிட்டுச்‌ சாதி, மத பேதங்கடந்த தனிப்பேரன்பிலே தலை நின்ற கவியரசி சரோசினிமீ தேவியுஞ்‌ சமூக வாழ்வுக்கும்‌ இலக்கியத்‌துக்குமுள்ள தொடர்பினை நன்கு அணிசெய்துள்ள சம்பவத்தையுந் ‌தொடர்புபற்றி இங்கே குறிப்பிடல்‌ சால்புடைத்தாம்‌. நமது காலத்து நிகழ்ச்சி யல்லவா?

இராமன்மீது கைகேயிக்குள்ள தாய்மையன்பு - உள்ளன்‌பு இயல்பானது; மாறுபடாதது

“மாசறு கேகயன்‌ மாது என் அன்னை”

என்று இராமனே அதற்கு அகச்சான்‌றுருக அமைகின்றான்‌. இத்தகைய மாசற்ற பேரன்பு மாறுபடுவதாயின்‌, அஃது ஏதோவோர்‌ அந்தரங்கமான அபார சத்தியாலேதான்‌ ஆகமுடியும்‌. வெறுங்‌ கழிமண்‌ உருண்டைக்கு அதனைச்‌ செய்யும்‌ ஆற்றலேது? பல்லும்‌ போய்ப்‌, பொல்லில்வரும்‌ வில்வடிவான  கூனியின்‌ சொல்லம்புக்கு இந்த நல்லன்பு இலக்காவது எவ்வாறு; கைகேயிக்கும்‌ இதைச்‌ செய்வது நல்லதன்று, தசரனனுக்குஞ்‌ சாத்தியமில்லை; இந்த நிலையானபேரன்பை நிலைகுலைததற்‌ குரிய சத்தி பெற்று முன்னரேயே அமைந்து கிடந்ததொரு நியதிதான் ‌இங்கே பெரியதோர்‌ சதிஇயக்கமாகி “முடிபுனை கடிகை” யை முடித்து வைக்க உருத்தெழுந்தது என்கின்றார்‌ நமது கவிச்‌சக்கரவர்த்தி.

“அரக்கர்‌ பாவமு மல்ல வரியற்றிய அறமுந்

துரக்க நல்லருள்‌ துறந்தளள்‌ தூமொழி மடமான்

இரக்க மின்மையன்‌ றோவின்‌ றுலகஙக ளிராமன்

பரக்குந்‌ தொல்புக ழமுதினைப்‌ பருகுகின்‌ றதுதே”

என்கின்ற இராமாயணச்‌ செய்யுள்‌ நமது ஐயமாகிய நோய்க்கு அமுத சஞ்சீவியாக அமைந்து மன அமைதியை அளித்து நிற்கின்றது.

இராமனது முடிபுனைதல்‌ கடியலாகிய இச்செயலே ஓர்‌அறசியற்‌ புரட்சியுமன்று; சதித்திட்டமுமன்று; பழிச்‌ செயலுமன்ற; பாதகமுமன்று; விதியின்‌ விளையாட்டு. இராமனது ஆகூழால்‌ இது நிகழ்ந்தது. இராமனது உடல்‌ வலியும்‌, மனோசத்தியும்‌, சமத்துவ புத்தியும்‌, காரிய சித்தியும்‌, அத்திர சத்திரயுத்‌த தந்திர முயற்சியும்‌ முதலியயாவும்‌ அனுபவ ஞானத்தால்‌ ஆக்கம்‌ பெறுதற்கு முன்னின்ற ஆகூழானது உலகினை ஏக்கமுறச்‌ செய்து, இராம சரித்திரத்தை உலகிலே அமரத்துவம் பெறச்‌ செய்துவிட்டது.

“அரக்கர்‌ பாவமும்” என்னும்‌ இச்‌ செய்யுள்‌ இராமாயணத்‌ திறவுகோல்‌; இராமாயண நடுநிலை வாக்கியம்‌; அதன் ‌உயர்நிலைச்‌ செய்யுள்‌. இச்‌ செய்யுளை யறிந்‌தால்‌, தசரதனையறியலாம்‌; கைகேயியையுங் காணலாம்‌. இராமாயணமும் ‌இனிது விளங்கும்‌.

“மாதவி மடந்தை

கானற்‌ பாணி கனக விசயர்தம்‌

முடித்தலை நெரித்தது”

என்னுஞ்‌ சிலப்பதிகார அடிகளும்‌ இங்கே நினைவுகூரத்‌தக்கனவாகும்‌. சிலப்பதிகார நிகழ்ச்சிகளை விளங்க இவ்வடிகள்‌ உறுதுணையாகின்றன.

இவ்வாறே சமூக வாழ்வில்‌ நிகழும்‌ விளங்கா நிகழ்ச்சிகளை விளங்கிக்‌ கொள்ளற்குரிய உயிர்நிலை வாக்கியங்களை இலக்கியங்‌களிலே கண்டு புலவர்‌ உள்ளங்களாகிய தெப்பங்களின்‌ மூலமாகச்‌ சமூக வாழ்வாகிய கடலைத்‌ தாண்டிச்‌ சம நிலைபெறுவோமாக. நடுநிலையிலே நின்‌று இலக்கியம்‌ படித்தல்‌ எளிதன்று.

“நத்தம்போற்‌ கேடும்‌ உளதாகுஞ்‌ சாக்காடும்

வித்‌தகர்க்‌ கல்லா லரிது”


Comments

Popular posts from this blog

மரபும்‌ வழக்கும்

இலக்கிய நுகர்வு

பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு