பணத்தை பெருக்கும் வழிகள்

 

பணத்தை பெருக்கும் வழிகள்

 

Contents

பணத்தை பெருக்கும் வழிகள்.. 3

அறிமுகம். 3

அத்தியாயம் 1: பண வரவை அதிகரிக்கும் வழிகள்.. 4

அத்தியாயம் 3: எளிமையாக வாழப்பழகு: ஆடம்பரத்தைத் தவிர்ப்பது. 9

அத்தியாயம் 4: சிறுகச் சிறுக சேமிக்கும் கலையும் அதன் சக்தியும். 11

அத்தியாயம் 5: பணம் பெருகும்போது உன் நிலையை மாற்றாதே... 13

அத்தியாயம் 6: பிறர் கவனிக்காத வழிமுறைகளை நீ கவனி.. 14

அத்தியாயம் 7: சோர்ந்து போகாதே! பிறரோடு உன்னை ஒப்பிடாதே! 16

 

 

பணத்தை பெருக்கும் வழிகள்

பணத்தை பெருகும் கலை : ஒரு முழுமையான வழிகாட்டி

அறிமுகம்

வாழ்க்கையில் நிதி சுதந்திரம் என்பது ஒரு கனவாக இல்லாமல், எம் வாழ்க்கையை மாற்றக்கூடிய, கனவுகளை அடையக்கூடிய யதார்த்தமாக மாற்றுவதற்கான பயணத்திற்கான ஒரு வழிகாட்டியாக இந்த நூலை நான் உருவாக்கியுள்ளேன்.

நாம் அனைவரும் பணத்தை விரும்புகிறோம், ஆனால் அதை எவ்வாறு சரியாகக் கையாள்வது, பெருக்குவது, பாதுகாப்பது என்பது பற்றிய ஒரு தெளிவின்மை இன்றி வாழ்ந்து வருகின்றோம். பணத்தை சரியாகக் கையாள்வது, பெருக்குவது, பாதுகாப்பது என்பது ஒரு கலை. இந்தப் புத்தகம், பணத்தை ஈர்ப்பதற்கான வழிகள், செலவுகளைக் கட்டுப்படுத்துதல், ஆடம்பரத்தைத் தவிர்த்தல், சேமிப்பின் முக்கியத்துவம், மற்றும் நிதி மேலாண்மையின் உளவியல் அம்சங்கள் குறித்து எளிய மற்றும் ஆழமான விளக்கங்களைத் தருகிறது. நீங்கள் பணக்காரராக இருந்தாலும், மத்தியதர வர்க்கத்தினராக இருந்தாலும், அல்லது நிதிச் சவால்களை எதிர்கொள்பவராக இருந்தாலும், இதில் உள்ள கருத்துக்கள் உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

பணத்தை எவ்வாறு உருவாக்குவது? How to earn money in online? How to earn money with passive income methods? Passive income, How to earn money with social medias? Easy methods for earn money….. என பல்வேறு தேடல் வினாக்களை நம்மவர்கள் பலரும் தேடி ஓடி வருவதுமாக உள்ளனர். இந்த நூலில் அவ்வாறான கருத்துக்களை தவிர்த்து முற்றிலும் வேறு விதமாக பணத்தை கையாள்வதனூடாக எவ்வாறாக பணத்தை பெருக்குவது என்பதனை பற்றி விளக்கியுள்ளேன்.


அத்தியாயம் 1: பண வரவை அதிகரிக்கும் வழிகள்

பண வரவை அதிகரிப்பது என்பது வெறும் சம்பாத்தியத்தை உயர்த்துவது மட்டுமல்ல, அது புதிய வருமான ஆதாரங்களைக் கண்டறிவது மற்றும் உங்கள் திறமைகளை பணமாக்குவது பற்றியதும் ஆகும். பணவரவை அதிகரிக்க பல வழிமுறைகள் உள்ளன. அவற்றை விரிவாக நோக்குவோம்.

 

வழிமுறை 1- உங்கள் திறமைகளை கண்டறிந்து பணமாக்குங்கள்.

உங்களுக்கு என்ன தெரியும், என்ன செய்ய முடியும், உங்களுடைய விசேட திறமைகள் உள்ளன என்பதை பற்றியும் சற்று உங்களை சுயமாக ஆராய்ச்சி செய்து அவற்றைப் பட்டியலிடுங்கள். நீங்கள் சமையல், ஆடை வடிவமைப்பு, கட்டட வடிவமைப்பு, எழுதுதல், கற்பித்தல், இணைய வடிவமைப்பு அல்லது வேறு ஏதேனும் ஒரு திறமையில் சிறந்தவராக இருக்கலாம். இந்தத் திறமைகளை எவ்வாறு பகுதிநேர வருமானமாக மாற்றலாம் என்று சிந்தியுங்கள்.

இவ்வாறான திறன்களை நீங்கள் மற்றவர்களுக்கு கற்பித்து பண வரவை அதிகரிக்கலாம். அதற்காக வை அதிகரிக்கலாம். அதற்காக Youtube, Websites, Social medias போன்ற பல்வேறு விதமான ஊடகங்களை பயன்படுத்தலாம். இதில் Youtube, Websites, Social medias ஊடாக நீங்கள் சேவைகளை வழங்கியும் அல்லது இந்த செயலிகள் ஊடாகவும் பணத்தை பெறலாம்.

 

வழிமுறை 2- பக்க வேலைகள் (Side Hustles)

உங்கள் வழக்கமான வேலைக்கு அப்பால், பகுதிநேர வேலைகளைச் செய்வது கூடுதல் வருமானத்தைப் பெற சிறந்த வழிமுறை ஆகும். ஆன்லைன் Freelicence (ஃப்ரீலான்சிங்), Classes (டியூஷன்), handicrafts (கைவினைப் பொருட்கள்) தயாரித்தல், அல்லது சிறிய அளவில் தொழில் தொடங்குவது போன்றவற்றை கருத்தில் கொள்ளலாம்.

இதனைத்தவிர உங்களுடைய பிரதான தொழிலை தவிர்த்து ஏனைய சிறு தொழில்களில் ஈடுபட முயற்சியுங்கள். இது முதலிலி சற்று கடினமாக இருக்கலாம். ஆனால் இது மிகுந்த பயன் தரக்கூடியது.

உதாரணமாக நீங்கள் உங்கள் பிரதான வேலையின் ஊடாக மாதம் 40000 பணம் ஈட்டுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். பிரதான வேலை முடிவடைந்ததும் மாலை 6.00 தொடக்கம் இரவு 10.00 மணி வரை பகுதி நேரமாக ஓர் வெதுப்பகத்தில் வேலை புரிகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். அதற்கு ஒரு மணி நேரத்திற்கு 100.00 கிடைக்கும் எனின்

நாள் ஒன்றிற்கு 3 மணி நேரம். எனவே 3*100

300.00

மாதத்திற்கு முப்பது நாட்கள் எனவே 30*300

9000.00

 

எனவே ஓர் சிறு தொகைப்பணம் சேமிப்பின் ஊடாக பெரும் தொகையாக மாற்றமுறுகின்றது. இவ்வாறாக பெறப்படும் பணத்தை செலவு செய்வதை தவிர்த்து சேமித்து முதலிடப் பழகுங்கள்.

 

வழிமுறை 3- முதலீடுகள்

சிறு சேமிப்பை முதலீடாக மாற்றுவது பணத்தை உங்களுக்காக வேலை செய்ய வைக்கும் ஓர் செயன்முறை ஆகும். பங்குச் சந்தை, பரஸ்பர நிதிகள் (Mutual Funds), அசையா சொத்துகள் (Real Estate) அல்லது தங்கத்தில் முதலீடு செய்வது பற்றி ஆராயுங்கள். உங்களுக்கு பொருத்தமான முதலீட்டு முறையில் முதலிடுங்கள். பெரிதாக முதலீடு செய்யவேண்டும் என்பது அவசியமில்லை. சிறிதாக ஆரம்பித்து  முதலீட்டை கொண்டு பெரிதாக பணம் சம்பாதிக்க முடியும். ஆனால், முதலீடு செய்வதற்கு முன் நன்கு ஆராய்ச்சி செய்வதும், முழுமையான ஆயத்தத்தோடு முதலீடு செய்வதும் அவசியம்.

வழிமுறை 4- பழைய பொருட்களை விற்பது

வீட்டில் உபயோகிக்காத பொருட்கள் இருந்தால், அவற்றை ஆன்லைனில் அல்லது கடைகளில் விற்று உடனடி வருமானத்தைப் பெறலாம். இது வீட்டை சுத்தமாக்குவது மட்டுமல்லாது ஓர் வருமானத்தை எமக்கு தருகின்றது.

 

வழிமுறை 5- கல்வி மற்றும் திறன் மேம்பாடு

புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது அல்லது உங்கள் தற்போதைய திறன்களை மேம்படுத்துவது உங்கள் வருவாய் திறனை அதிகரிக்கும். உதாரணமாக நீங்கள் உங்கள் வேலையில் முன்னோக்கிச் செல்ல, பதவி உயர்விற்கு என அனைத்து விதமான மேம்பாட்டிற்கும் கல்வி மற்றும் திறன் மேம்பாடு அவசியமாகும். இது உங்கள் வருவாயை அதிகரிக்கச்செய்யும்.


அத்தியாயம் 2: செலவைக் குறைக்கும் மந்திரங்கள்

வருமானத்தை அதிகரிப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் செலவுகளைக் குறைப்பதும் பணத்தை பெருக்குவதற்கான ஒரு வழிமுறை ஆகும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது உங்கள் நிதி நிலைமையை வலுப்படுத்தும். இதற்கான சில வழிமுறைகளை நான் எடுத்துக்கூறுகின்றேன். அவற்றை கடைப்பிடித்து செலவினை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

நாம்மில் பெரும்பான்மையானோர் அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் மிக குறைவாகவும் அத்தியாவசியம் அற்ற தேவைகளிற்காக மிக அதிகமாகவும் பணத்தை செலவிடுகின்றோம்.

வழிமுறை 1- பட்ஜெட் போடுதல்

இது ஓர் சிறந்த பண கண்காணிப்பு வழிமுறை என்று நாம் கூறலாம். காரணம் இது பணம் வரும், போகும் வழிமுறைகளை கண்காணிக்க உதவுகின்றது. எனவே இது செலவை கட்டுப்படுத்த உதவும் ஓர் சாதனமாக காணப்படுகின்றது. உங்கள் வருமானம் மற்றும் செலவுகளை எழுதி வையுங்கள்.

எங்கு அதிகமாக மற்றும் அநாவசியமாக செலவு செய்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்வது, தேவையற்ற செலவுகளைக் குறைக்க உதவும். ஒரு மாதாந்திர பட்ஜெட்டை உங்களின் பணத்தினை பெருக்கும் வழிமுறைக்காக உருவாக்கி அதைக் கடைபிடிக்கப் பழகுங்கள்.

 

வழிமுறை 2- அத்தியாவசியத் தேவைகளை அடையாளம் காணுதல்

உங்கள் செலவுகளை அத்தியாவசியமானவை (உணவு, வாடகை, போக்குவரத்து) மற்றும் அத்தியாவசியமற்றவை (சினிமா, வெளியில் சாப்பிடுவது, புதிய கேட்ஜெட்டுகள்) எனப் பிரித்துப் பாருங்கள். அத்தியாவசியமற்ற செலவுகளைக் குறைப்பதில் கவனம் செலுத்துங்கள். இதனூடாக நாம் 40 சதவீதமான செலவுகளை குறைக்க முடியும்.

 

வழிமுறை 3- செலவழிக்காத சவால்கள்

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (உதாரணமாக ஒரு வாரம் அல்லது ஒரு மாதம்) குறிப்பிட்ட செலவுகளைக் கட்டுப்படுத்துவது ஒரு பயன்தரும் வழியாகும். உதாரணமாக வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்து வீட்டில் சமைப்பது, பொழுதுபோக்குக்காக பணம் செலவழிப்பதைத் தவிர்ப்பது, விரைவு உணவுகளை தவிர்த்தல், தேவையற்ற பயணங்களை தவிர்த்தல் போன்றவை இதனுள் அடங்கும்.

 

வழிமுறை 4- ஒப்பீட்டு ஷாப்பிங்

தற்காலத்தில் ஷாப்பிங் அல்லது நவீன கொள்வனவு சந்தை உத்திகள் மிக துல்லியமான சந்தை உத்திகளை பயன்படுத்தி வருகின்றன. இந்த உத்திகளால் பெரும்பாலான மக்களுடைய பணம் சந்தைகளினுள் விடப்படுகின்றது. இந்த சந்தைப்படுத்தல் உத்திகளை அறிந்து எப்போதும் விழிப்பாக செயற்படுவது செலவை குறைப்பதற்கான ஓர் மந்திரமாகும்.

ஒரு பொருளை வாங்குவதற்கு முன், வெவ்வேறு கடைகளிலும் ஆன்லைனிலும் விலைகளை ஒப்பிட்டுப் பார்த்து, குறைந்த விலையில், தரமான பொருட்களை வாங்குங்கள். இதனூடாகவே சரியான தரமான பொருட்களை கொள்வனவு செய்து செலவை குறைப்பதற்கான உக்தி ஆகும்.

வழிமுறை 4- குறைந்த விலையில் வாழப்பழகு

ஆடம்பரமான பொருட்களைத் தவிர்த்து, உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் எளிமையான பொருட்களை வாங்குங்கள். இது ஆசை மற்றும் தேவைக்கான தெளிவான வேறுபாட்டை புரிந்து செயற்படும் ஆற்றலினால் உண்டாகும் ஓர் தெளிவாகும். இது செலவை குறைக்கும் உபாயம் ஆகும்.

 

 


அத்தியாயம் 3: எளிமையாக வாழப்பழகு: ஆடம்பரத்தைத் தவிர்ப்பது

பணம் பெருகும்போது உங்கள் நிலையை மாற்றாதிருப்பது, ஆடம்பரத்தைத் தவிர்ப்பது ஆகியவை நீண்ட கால நிதி பாதுகாப்பிற்கு மிகவும் அவசியம். பெரும்பாலான மக்கள் தமது வருமானம் அதிகரிக்கும்போது தமது வாழ்க்கை தரத்தை ஆடம்பரம் மூலமாக அதிகரிக்கின்றனர். இது உங்களுக்கு பண சுதந்திரத்தையோ அல்லது பண அதிகரிப்பையோ தராது. மாறாக இது உங்களுக்கு ஒரே மாதிரியான பணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையையே கொண்டுவரும். இதனை தவிர்க்க சில வழிமுறைகளை காண்போம்.

 

வழிமுறை 1- திருப்தி உணர்வு

உங்களிடம் இருப்பவற்றில் திருப்தி அடையக் கற்றுக்கொள்ளுங்கள். சமூக வலைத்தளங்களில் மற்றவர்களின் ஆடம்பரமான வாழ்க்கையைப் பார்த்து நீங்களும் அப்படி வாழ வேண்டும் என்று நினைக்காதீர்கள். அத்துடன் இணைய செயலிகள் ஊடாக பரவலாக்கப்படும் வணிக தயாரிப்புக்களுக்கு உங்களை வாடிக்கையாளர் ஆக்காதீர்கள். அது உங்களுடைய பணத்தை சடுதியாக உங்களை அறியாமலே செலவு செய்ய வைத்துவிடும்.

அத்தியாவசியமான ஒரு பொருள் தேவை எனின் அதனது விலையை சரிபார்த்து வாங்க எல்லா விதமான சந்தைப்படுத்தல் தளங்கள், வழிமுறைகளையும் பயன்படுத்தலாம். அந்த நேரத்தில் உங்களின் மனக்கட்டுப்பாடு மிக அவசியமானது. காரணம் தற்கால உணிக உலகம் ஓர் தந்திரத்தை பயன்படுத்தி வருகின்றது. ஆரம்ப கால கடைகள் மூடிய அமைப்பில் காணப்படும்.

நாம் தேவையான பொருட்களை கூறி பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் தற்காலங்களில் பெரும்பாலும் திறந்த கடை அமைப்பு காணப்படுகின்றது. இது எவ்வாறானது எனில் நீங்கள் ஓர் சவர்க்காரம் வாங்க சென்றால் அருகில் ஓர் அழகு சாதனப் பொருள் வைக்கப்பட்டிருக்கும். எம்மை அறியாமலே அந்த தேவையற்ற பொருள் எமது பொருட்கூடையில் சேர்ந்து கொள்ளும். இது தற்கால வியாபார தந்திரம். தேவையற்ற பொருட்களை கொள்வனவு செய்ய வைப்பது இவ்வாறு நடைபெற உங்கள் பணம் வீணாக செலவாகும். எனவே திருப்தியான மனதுடன் அவதானமாக எல்லா விடயத்திலும் செயற்படுங்கள்.

 

வழிமுறை 2- தேவையா? ஆசையா?

ஒரு பொருளை வாங்கும் முன், இது உண்மையிலேயே தேவையா அல்லது வெறும் ஆசையா என்று சிந்தியுங்கள். ஆசைகள் எளிதில் நிறைவேற்ற முடியாதவை மற்றும் முடிவற்றவை. எனவே ஆசை மற்றும் தேவையை பிரித்தறிய கற்றுக்கொள்ளுங்கள். தேவைக்கு எப்போதும் முன்னுரிமை கொடுங்கள்.

 

வழிமுறை 3- ஆடம்பர செலவுகளைக் குறைத்தல்

புதிய கார், பெரிய வீடு, வெளிநாட்டுப் பயணம் போன்ற ஆடம்பர செலவுகளை உடனடியாகத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக, அந்த பணத்தை முதலீடு செய்து, அது பெருகும் வரை காத்திருங்கள்.

 

வழிமுறை 4- சூழலியல் வாழ்க்கை முறை

எளிமையான வாழ்க்கை முறை என்பது சுற்றுச்சூழலுக்கும் நல்லது. குறைவான நுகர்வு, மறுபயன்பாடு, மறுசுழற்சி ஆகியவை பணத்தையும் சேமிக்கும், பூமியையும் பாதுகாக்கும். இந்த வாழ்க்கை முறையை சுயசார்பு வாழ்க்கை முறை என்று அழைக்கப்படுகின்றது. நாமே பெரும்பாலான எமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதே இதனது அடிப்படை ஆகும். இம்முறை ஊடாக நாம் வாடிக்கையாளர், நுகர்வோர் என்ற கதாப்பாத்திரத்தில் இருந்து நாம் முதலாளிகள் என்ற கதாப்பாத்திரத்தை நோக்கி நகர முடியும். இது பணவரவை அதிகரிக்க உதவும் உளவியல் சார் முறையாகும்.

வழிமுறை 5- மன அமைதி

ஆடம்பரத்தைத் தவிர்ப்பது மன அமைதியையும், நிதி ரீதியான சுதந்திரத்தையும் தரும். நீங்கள் கடனில் மூழ்காமல் நிம்மதியாக வாழலாம். எனவே மன அமைதி பெறும் வழிமுறைகள் மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். இது உங்களின் வாழ்க்கையை சிறப்பாக்கும்.

 

 


அத்தியாயம் 4: சிறுகச் சிறுக சேமிக்கும் கலையும் அதன் சக்தியும்

"சிறு துளி பெரு வெள்ளம்" என்பது சேமிப்பிற்கு மிகவும் பொருந்தும். சிறிதாகச் சேமிக்கத் தொடங்குவது காலப்போக்கில் பெரிய தொகையாக மாறும். ஒரு சிலர் சேமிக்க தொடங்கும்போது மிகவும் பெரிதாக சேமிப்பார்கள். ஆனால் சில நாட்களில் சேமித்த பணத்தில் மீண்டும் கைவைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். எனவே உங்களின் தேவைகளுக்கு ஏற்ப பணத்தை திட்டமிட்டு சேமிப்பையும் திட்டமிடுங்கள்.

 

வழிமுறை 1- ஆரம்பத்தில் சேமியுங்கள்

சம்பளம் கிடைத்தவுடன் முதல் வேலையாக சேமிப்புக்கான தொகையை ஒதுக்குங்கள். மீதமுள்ள பணத்தில் உங்கள் செலவுகளைத் திட்டமிடுங்கள். காரணம் மாத முடிவில் பார்த்துக்கொள்வோம் என்று பணத்தை வைத்திருப்பது எவ்வாறாயினும் உங்கள் பணத்தை செலவு செய்ய தூண்டி உங்கள் பண கையிருப்பை பூச்சியமாக மாற்றிவிடும். எனவே சம்பளம் கிடைத்தவுடன் முதல் வேலையாக உங்களுக்கான சேமிப்பை செய்யுங்கள்.

 

வழிமுறை 2- சிறு தொகையை தினமும் சேமியுங்கள்

அது கட்டாய சேமிப்பு என கருதப்படும். ஒரு நாளைக்கு ரூபாய் 10 அல்லது ரூபாய் 20 என ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு உண்டியலில் அல்லது சேமிப்புக் கணக்கில் போடுங்கள்.

ஒரு வருடத்தில் அது ஒரு பெரிய தொகையாக மாறும். இதை உங்கள் வசதிக்கேற்ப செயற்படுத்தலாம். உதாரணமாக சேமிப்பு தொகையை உங்களின் வசதிக்கு ஏற்ப அதிகரிப்பதை கருதலாம்.

 

வழிமுறை 3-தானியங்கி சேமிப்பு

உங்கள் வங்கியில் தானியங்கி சேமிப்பு வசதியை பயன்படுத்துங்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு மாற்றும்படி தானியங்கி அமைப்பு முறையை அமைத்துக் கொள்ளுங்கள். இது மிக மிக அதிக பயன் தரும் முறையாகும்.

 

வழிமுறை 4-சிக்கனமான பழக்கங்கள்

மின்சாரத்தை தேவையற்ற நேரங்களில் அணைப்பது (தேவையற்ற மின்விளக்கு, மின் விசிறி), தண்ணீரைச் சேமிப்பது, பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவது, வீட்டில் சமைப்பது போன்ற சிக்கனமான பழக்கங்கள் மூலம் சிறு சிறு தொகைகளைச் சேமிக்கலாம். இதனூடாக சிறுக சிறுக சேமிக்கலாம்.

 

வழிமுறை 4- சேமிப்பு இலக்குகள்

ஒரு குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்து சேமிப்பது உங்களை ஊக்குவிக்கும். உதாரணமாக, ஒரு வீட்டின் முன்பணம், குழந்தைகளின் கல்வி, ஓய்வூதிய நிதி போன்றவை. அல்லது ஓர் தொகையை நிர்ணயித்து சேமிப்பதையும் கருதலாம். உதாரணமாக ஒரு வருடத்தில் 100000 ரூபாய் சேமிக்க வேண்டும் என்ற இலக்கை கொண்டு செயற்படுவதை கருதலாம்.

 

 

அத்தியாயம் 5: பணம் பெருகும்போது உன் நிலையை மாற்றாதே

பணம் அதிகமாக வரும்போது மனிதர்களின் இயல்பு மாறுவது வழக்கம். ஆனால், நிதி சுதந்திரத்தை நிலைநிறுத்த இது பொருத்தமற்றதாகும். பணம் பெருகும்போது நிலையை மாற்றாது இருக்கும் இந்த அணுகுமுறை மிகவும் முக்கியம்.

 

வழிமுறை 1- பணத்தால் வரும் மாற்றம்

பணம் பெருகும்போது, சிலர் தங்கள் வாழ்க்கை முறையை ஆடம்பரமாக மாற்றிக்கொள்வார்கள். ஆனால், அந்த மாற்றம் ஒரு பொறியில் விழ வைக்கும். நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகமாகச் செலவு செய்யத் தொடங்கிவிடுவீர்கள். எனவே உங்களின் இலக்கை அடைந்து ஓர் நிலையான இடத்தை அடையும் மட்டும் பணத்தால் வரும் மாற்றத்தை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

 

வழிமுறை 2- தாழ்மையுடன் இருங்கள்

நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், எப்போதும் தாழ்மையுடனும், எளிமையுடனும் இருங்கள். உங்கள் வேர்களை மறக்காதீர்கள். காரணம் எமது கடந்த கால வாழ்வின் தடங்கள் எம்மை எப்போதும் நெறிப்படுத்தும் ஆசான்கள்.

 

வழிமுறை 3- சமூக அழுத்தம்

சமூக அழுத்தம் காரணமாக ஆடம்பரமாக வாழ முயற்சி செய்யாதீர்கள். மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை விட, உங்கள் நிதி பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்கின்றீர்கள் என்பது மிக முக்கியமானது ஆகும். காரணம் உங்களின் வாழ்க்கையை தீர்மானிக்கவே நீங்கள் கடினமான இச்சேமிப்பு மற்றும் நிதி மேலாண்மை த்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள் என்பதனை மறவாதீர்கள். எப்போது உங்கள் வாழ்க்கைக்கும், உங்கள் எதிர்காலத்திற்கும் முன்னுரிமை கொடுங்கள்.

 

வழிமுறை 4- நிலையான வளர்ச்சி

உங்கள் வருமானம் அதிகரித்தால், அதை ஆடம்பரத்திற்கு செலவு செய்யாமல், முதலீடு செய்யவும், பணத்தை பெருக்குவதற்கும் பயன்படுத்துங்கள். இதுவே நிலையான வளர்ச்சி ஆகும்.

 

வழிமுறை 5- மனித நேயம்

பணத்தால் கர்வம் கொள்ளாமல், ஒருதொகை பணத்தை உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவி செய்யவும், சமூகத்திற்குப் பங்களிக்கவும் பயன்படுத்துங்கள். இது உங்களிற்கு ஆன்மீக பலத்தை தந்து உதவும். அத்துடன் உள திருப்தியை ஏற்படுத்தும்.

 

 

அத்தியாயம் 6: பிறர் கவனிக்காத வழிமுறைகளை நீ கவனி

பெரும்பாலான மக்கள் நிதி மேலாண்மை குறித்து பொதுவான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறார்கள். ஆனால், கூர்ந்து கவனிப்பவர்கள் தனித்துவமான வாய்ப்புகளைக் கண்டறிவார்கள். நீங்கள் வாய்ப்புக்கள் மற்றும் வழிமுறைகளை கூர்ந்து கவனிப்பவர் ஆகுங்கள்.

 

வழிமுறை 1- நுணுக்கமான கவனிப்பு

சிறிய முதலீட்டு வாய்ப்புகள், சந்தையின் போக்குகள், புதிய தொழில்நுட்பங்கள், அல்லது பிறர் கவனிக்காத வணிக வாய்ப்புகளைக் கண்டறியுங்கள். இவை தனித்துவமாக உயர்த்தும் கருவிகளாக செயலாற்றி உங்களை உயர்த்தக்கூடியவை ஆகும்.

 

 

வழிமுறை 2- சந்தை இடைவெளிகள்

ஒரு குறிப்பிட்ட தேவையை அல்லது சேவையை பூர்த்தி செய்யாத சந்தை இடைவெளிகளை அடையாளம் காணுங்கள். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட சேவை அல்லது தயாரிப்புக்கான தேவை இருக்கலாம், ஆனால் அதற்கு ஏதோ ஒரு விதத்தில் ஓர் பற்றாக்குறை இருக்கலாம். இச் சந்தை இடைவெளியை எப்போதும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

 

வழிமுறை 3- பழைய பொருட்கள், புதிய மதிப்பு

பழைய பொருட்கள் அல்லது சேவைகளுக்கு புதிய மதிப்பைக் கூட்டக்கூடிய வழிகளைக் கண்டறியுங்கள். உதாரணமாக, பழைய தளபாடங்களை புதுப்பித்து விற்பது, பழைய இலத்திரனியல் சாதன பாகங்களை விற்பதை உதாரணமாக கொள்ளலாம்.

 

வழிமுறை 4- நீண்ட கால முதலீடுகள்

உடனடி லாபத்திற்காக அலையாமல், நீண்ட காலத்திற்கு அதிக வருவாய் தரும் முதலீடுகளை ஆராயுங்கள். இது பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு அணுகுமுறை ஆகும். காரணம் மனிதர்கள் தற்போது உடனடி வழிமுறைகள் மற்றும் உடனடி தீர்வுகளையே தேடி அலைகின்றனர். பெரும்பாலான மக்கள் நீணட, மெதுவான, நிலையான முதலீடுகளை பற்றி அக்கறை கொள்வது இல்லை. எனவே உங்கள் முதலீடுகள் மட்டில் அதிக கவனம் செலுத்துங்கள்.

 

வழிமுறை 5- நிதானமான வளர்ச்சி

வேகமாகப் பணக்காரராவதற்கான திட்டங்களைத் தவிர்த்து, நிதானமான, ஆனால் நிலையான வளர்ச்சிக்கு கவனம் செலுத்துங்கள். இன்று மக்கள் How to become a billionaire fast? how to become a millinery in one year? என்று பல நடைமுறை சாத்தியம் அற்ற மிக கடினமான கேள்விகளை கேட்டு பதில் தேடுகின்றனர். முதலில் இந்த மனநிலையை மாற்றுங்கள். பணக்காரர் ஆவது மிக இலகுவான மற்றும் நீண்ட நெடிய பயணம். பயணத்தில் நிச்சயம் தடைகள் வரும்.

அவ்வாறு வரும் தடைகளை தகர்க்க அந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பதை பற்றிய அனுபவ பாடம் உதவும். அதே சமயம் உங்களின் பணம் பற்றிய மனநிலை மற்றும் பண கையாள்வு மிக முக்கியமானதாகும்.

 

 

அத்தியாயம் 7: சோர்ந்து போகாதே! பிறரோடு உன்னை ஒப்பிடாதே!

பணத்தைச் சேமிக்கும் மற்றும் பெருக்கும் பயணத்தில் சோர்ந்து போவதற்கான மிக முக்கிய காரணம் மற்றவர்களுடன் ஒப்பிடுவது ஆகும். இது ஓர் பெரும் தடையாகும். இவற்றை களைவதே பணம் பெருக்கும் வழிமுறைக்கான முக்கிய படிக்கல்லாகும்.

 

வழிமுறை 1- சவால்களை எதிர்கொள்ளுங்கள்

நிதிச் சவால்கள் வாழ்வில் வருவது சகஜம். அவற்றை ஒரு கற்றல் அனுபவமாகப் பாருங்கள். தோல்விகள் உங்களுக்கு ஊக்கமளிக்கட்டும். சவால்களை எதிர்கொள்வதனால் வரும் அனுபவ பாடத்தை உங்கள் வாழ்க்கை பாடமாக மாற்றி பணத்தை பெருக்கும் வழிமுறைக்காக அதனை பயன்படுத்துங்கள்.

 

வழிமுறை 2- விடாமுயற்சி

ஒரே இரவில் பணக்காரர் ஆக முடியாது. விடாமுயற்சியும், பொறுமையும் மிகவும் அவசியம். உங்கள் இலக்குகளை அடைய தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். விடாமுயற்சி மிக முக்கியமான வெற்றிப்படிக்கட்டு ஆகும். இது பணத்தை பெருக்க மட்டுமல்ல உங்கள் வாழ்வில் வெற்றிபெறவும் விடாமுயற்சி மிக முக்கியமானதாகும்.

 

வழிமுறை 3- பிறரோடு ஒப்பிடுவதைத் தவிர்க்கவும்

சமூக வலைத்தளங்களில் அல்லது நிஜ வாழ்வில் மற்றவர்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறையைப் பார்த்து உங்களை நீங்களே ஒப்பிட்டுக்கொள்ளாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட நிதிப் பயணம் உள்ளது. அதனை புரிந்து கொண்டு செயற்படுங்கள். பிறரோடு ஒப்பிட்டால் சில சமயம் சோர்ந்து போகக்கூடிய மனநிலையை அது ஏற்படுத்தலாம்.


வழிமுறை 4-உங்கள் பாதையை உருவாக்குங்கள்

உங்கள் சொந்த இலக்குகளையும், நிதிப் பாதையையும் உருவாக்கி, அதற்கேற்ப செயல்படுங்கள். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது முக்கியமல்ல. இது உங்களுக்கு  தெளிவான பண மேலாண்மைக்கான மனநிலையை கொடுக்கும்.

 

வழிமுறை 4-சிறு வெற்றிகளைக் கொண்டாடுங்கள்.

            நீங்கள் சிறு சிறு சேமிப்பு இலக்குகளை அடைந்தாலும்,            அதைக் கொண்டாடுங்கள். இது உங்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்தும். உங்களுக்கு நீங்களே சிறந்த ஆதரவு மற்றும் துணை. எனவே உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

 

முடிவுரை

பணம் என்பது ஒரு கருவி. அது நம் வாழ்க்கையை மேம்படுத்தவும், கனவுகளை அடையவும் உதவுகிறது. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட வழிமுறைகள், உங்கள் நிதிப் பயணத்தில் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன். குறிப்பாக கூறினால் இவை அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே வகையான தன்மையை கொண்டது. ஒரு வழிமுறையை தவிர்த்து ஒரு வழிமுறையை கடைப்பிடிப்பது சிறந்த பலனை தராது. எனவே அனைத்து வழிமுறைகளையும் கையாளுங்கள். பண சுதந்திரத்தை இலகுவாக எட்டிப் பிடியுங்கள். பணம் பெருகும் கலை என்பது நிதி அறிவு மட்டுமல்ல, மன அமைதி, பொறுமை, விடாமுயற்சி மற்றும் தாழ்மை போன்ற குணாதிசயங்களையும் உள்ளடக்கியது. இந்தப் பயணத்தில் வெற்றிபெற உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் நண்பர்களே!

Comments

Popular posts from this blog

மரபும்‌ வழக்கும்

இலக்கிய நுகர்வு

பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு